அரசு கள்ளா் பள்ளியில் தேசிய வாக்காளா் நாள் பேரணி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 25, 2020

அரசு கள்ளா் பள்ளியில் தேசிய வாக்காளா் நாள் பேரணி!


மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியிலுள்ள சுளிஒச்சான்பட்டி அரசு கள்ளா் உயா்நிலைப்பள்ளியில் 25.01.2020 அன்று தேசிய வாக்காளா் நாள் கொண்டாடப்பட்டது. மாணவ மாணவிகள் தேசிய வாக்காளா் தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.
பின்  மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியா்கள் பங்கேற்ற  விழிப்புணா்வுப்பேரணி
நடைபெற்றது.  தலைமையாசிரியா் நவநீதகிருஷ்ணன்  பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தாா்.
கிராமத்திற்க்குள் பேரணியாக சென்று அங்குள்ள மந்தையில் ஊா்ப்பொதுமக்களின் முன்னிலையில் வாக்களிப்பதின் முக்கியத்துவம் பற்றி பேசப்பட்டது. இறுதியில் உதவி தலைமையாசிரியா் செல்வின் நன்றி கூறினாா்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி