தள்ளிப்போகிறது நகர்புற உள்ளாட்சி தேர்தல் : மே மாதம் நடக்க வாய்ப்பு!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 29, 2020

தள்ளிப்போகிறது நகர்புற உள்ளாட்சி தேர்தல் : மே மாதம் நடக்க வாய்ப்பு!!


தமிழகத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்காமல் உள்ள, ஒன்பது மாவட்டங்களில், வார்டு வரையறை செய்யும் பணியை, மார்ச், 5க்குள் முடிக்க, வார்டு மறுவரையறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வார்டு வரையறை பணி, மார்ச் வரை நடக்க உள்ளதால், ஒன்பது மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல், மே மாதம் தள்ளிப்போக வாய்ப்புள்ளது.

தமிழகத்தில், புதிய மாவட்டங்கள் தவிர்த்து, 27 மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல், இரண்டு கட்டமாக, கடந்த மாதம் நடத்தப்பட்டது. ஜன., 2ல் ஓட்டு எண்ணிக்கை முடிந்து, புதிய உள்ளாட்சி பிரதிநிதிகள், பணிகளை துவக்கி உள்ளனர்.

சென்னை தவிர்த்து, தேர்தல் நடத்தப்படாமல் உள்ள, ஒன்பது மாவட்டங்களில், மூன்று மாதங்களுக்குள், தேர்தல் நடத்த, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல், அனைத்து மாவட்டங்களிலும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டியுள்ளது.

இதற்கான ஆயத்தப் பணிகளை, மாநிலத் தேர்தல் ஆணையம் துவக்கி உள்ளது. புதிய மாவட்டங்களில், வார்டு வரையறை பணியை, அதற்கான ஆணையம் துவக்கி உள்ளது.

புதிய மாவட்டங்களில், வார்டு வரையறை தொடர்பான அறிவிப்பு, இன்று வெ ளியாக உள்ளது.புதிய வார்டு வரையறை வரைவு பட்டியல், நாளை வெ ளியிடப்படும்.

 இது தொடர்பாக, பிப்., 8 வரை, கருத்து தெரிவிக்கலாம்; அதன் மீது, பிப்., 15க்குள் நடவடிக்கை எடுக்கப்படும். அதன்பின், வார்டு வரையறை வரைவு பட்டியல், துறை தலைமைக்கு அனுப்பப்படும்.

பிப்., 20ல், பொது மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்துவதற்கான அறிவிப்பை, ஆணையம் வெ ளியிடும். பிப்., 27 காலை, 10:00 மணிக்கு, காஞ்சிபுரம் மாவட்டத்திலும், மாலை, 3:00 மணிக்கு, செங்கல்பட்டு மாவட்டத்திலும், கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி