சமூக அறிவியல் வினாத்தாளில் மாற்றம்: பத்தாம் வகுப்பில் தேர்ச்சி விகிதம் சரியும்? - kalviseithi

Jan 15, 2020

சமூக அறிவியல் வினாத்தாளில் மாற்றம்: பத்தாம் வகுப்பில் தேர்ச்சி விகிதம் சரியும்?


பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் வினாத்தாள் வடிவமைப்பில் ஏற்படுத்திய மாற்றத்தால், அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம், பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.தமிழகத்தில், நடப்பு கல்வியாண்டில், பத்தாம் வகுப்புக்கு பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது. அதில், சமூக அறிவியல் பாடம், இரு தொகுதிகளாக பிரிக்கப்பட்டு, 500 பக்கங்களுக்கு அதிகமான புத்தகங்களாக வெளியிடப்பட்டுள்ளன. கல்வியாண்டு தொடக்கத்தில், வினாத்தாள் மாதிரி அடிப்படையில், காலாண்டு தேர்வு நடந்தது. அரையாண்டு தேர்வில், வினாத்தாள் முறை மாற்றப்பட்டது. ஒரு மதிப்பெண் வினாக்களில் 'பொருத்துக' பகுதிக்கு, 10 மதிப்பெண், தலைப்பின் கீழுள்ள வினாக்களுக்கு பதிலளிக்கும் பகுதிக்கு, 8 மதிப்பெண் ஆகியவற்றுக்கு பதில், விரிவான விடையளித்தல், கட்டாய வினா பகுதிகளில், வினாக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதனால் அரசு பள்ளிகளில், அரையாண்டு தேர்வில், 50 சதவீதத்துக்கு மேலான மாணவர்கள் தேர்ச்சி அடையவில்லை.தேர்வில் தவறுதலாக கேட்கப்பட்டிருக்கலாம் என, ஆசிரியர்கள் நினைத்துக் கொண்டிருக்கையில், அரசு தேர்வுத்துறை இயக்குனர், 'அரையாண்டு தேர்வு அடிப்படையில் பொதுத்தேர்வு நடத்தப்படும்' என அறிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக அறிவியல் பாட ஆசிரியர்கள் கூறியதாவது: அரசு பள்ளி மாணவர்களுக்கு, பொருத்துக உள்ளிட்ட பகுதிகள் கைகொடுத்தன. பொதுத்தேர்வுக்கு இரு மாதமே உள்ள நிலையில், வினாத்தாள் மாற்றப்பட்டுள்ளதால், அதற்கேற்ப மாணவர்களை தயார்படுத்துவதும் கடினம். இதனால் நடப்பு கல்வியாண்டில், தேர்ச்சி விகிதம் சரியும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க, ஏற்கனவே வெளியிட்ட மாதிரி வினாத்தாள் அடிப்படையில், பொதுத்தேர்வு நடத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

9 comments:

 1. Book full ah padika sollunga da dei

  ReplyDelete
 2. அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களை முழுமையாக படிக்கவைக்காமல் குறிப்பிட்ட பகுதிகளை மட்டுமே படிக்க வைக்கும் ஆசிரியர்களுக்கு இனி ஆப்பு.

  ReplyDelete
  Replies
  1. உனக்கு அறிவு இல்லை மாணவர்கள் நிலைமை புரிந்து கொள்ள வேண்டும்

   Delete
 3. சமூக அறிவியல் பாடத்தினை மாணவர்க்கு கற்பிக்கும் ஆசிரியர்க்கு தெரியும் கடினத்தன்மை சும்மா கமென்ட் அடிக்கறவனுக்கென்ன கசக்கிறதா?

  ReplyDelete
  Replies
  1. Maths I vidavaaa social kastam. Katha solrathuku valikkuthaaaa

   Delete
 4. பாடத்தை முழுமையாக கற்பிப்பவர் கவலையடைய தேவையே இல்லையே.

  ReplyDelete
  Replies
  1. Loosu Only full teaching is not giving to pass.

   Delete
 5. தேர்ச்சி குறைந்தால் பரவாயில்லை. தரமான வினாத்தாள் வடிவமைப்பை அறிமுகம் செய்ய வேண்டும்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி