வேண்டாம் உங்கள் பொங்கல் விடுமுறை! ( படித்ததில் பிடித்தது ) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 12, 2020

வேண்டாம் உங்கள் பொங்கல் விடுமுறை! ( படித்ததில் பிடித்தது )


வேண்டாம் உங்கள் விடுமுறை
பள்ளியில்
பொங்கல் வைப்பதா .
வேண்டாமா
பெருங்குழப்பம்
வேண்டாம் உங்கள்
விடுமுறை

கரும்பு வாஙகவா
வேண்டாமா
கவலையில்
வேண்டாம் உங்கள் விடுமுறை

வந்தது போனது
எல்லாம்
வாட்ஸ்அப் பில் ...
வேண்டாம் உங்கள் விடுமுறை

பலநாள் விடுமுறை
பழித்து பேசும்
சமூகம்
வேண்டாம் உங்கள் விடுமுறை

இந்த நாள்
விடுமுறை எனில்
இனியொரு நாள்
வேலை நாள் தானே..
வேண்டாம் உங்கள் விடுமுறை

ஐந்து நாள்
வேலைசெய்து
ஆறாம் நாள்
வேளை
அலுப்பாய் போனது
எனக்கு
வேண்டாம் உங்கள் விடுமுறை

பள்ளி விடுமுறை
விடுவதில்
பரமபத
அரசியல்
வேண்டாம் உங்கள் விடுமுறை

மாணவர்களுடன்
மாணவராக
எம்மண்ணின்
பண்டிகை
கொண்டாட
ஆயத்தம் ஆனேன்
ஆசிரியராக
வேண்டாம் உங்கள் விடுமுறை.

11 comments:

  1. ஆமாம் வேண்டாம் விடுமுறை
    வேண்டும் வேலை

    ReplyDelete
  2. வேண்டாம் விடுமுறை

    ReplyDelete
  3. வேண்டாம் விடுமுறை

    ReplyDelete
  4. உலக வரலாறு படித்தவர்களுக்கு தெரியும் ஆசிரியர்களை பழித்து பேசிய எந்த சமூகமும் வளர்ந்ததில்லை ஆமாம் வேண்டாம் உங்கள் விடுமுறை

    ReplyDelete
  5. உலக வரலாறு படித்தவர்களுக்கு தெரியும் ஆசிரியர்களை பழித்து பேசிய எந்த சமூகமும் வளர்ந்ததில்லை ஆமாம் வேண்டாம் உங்கள் விடுமுறை

    ReplyDelete
  6. அருமை, ஆட்சியாளர்களின் பெருந்தன்மை அடடா, அடடா!

    ReplyDelete
  7. வேண்டாம் விடுமுறை வேண்டவே வேண்டாம் விடுமுறை

    ReplyDelete
  8. Rest need for our throat ...we need leave on sat and sun

    ReplyDelete
  9. நாளை மாணவர்கள் இல்லாமலே பள்ளி நடைபெறுவது உங்கள் விருப்பம் இன்றே 40 சதவீத மாணவர்கள் தான் வந்துள்ளனர் நாளை 10 முதல் 15 சதவீதம் தான் வருவார்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி