நாளையும் நாளை மறுநாளும் பொங்கல் விடுமுறை உண்டா? இல்லையா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 12, 2020

நாளையும் நாளை மறுநாளும் பொங்கல் விடுமுறை உண்டா? இல்லையா?

தமிழகத்தில் பொங்கல் விடுமுறையாக ஜனவரி 15 முதல் ஜனவரி 17 வரை அறிவிக்கப் பட்டுள்ள நிலையில் ஜனவரி 13 மற்றும் 14 ஆம் தேதியும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் இதுகுறித்து முதல்வரிடம் பேசி முடிவு செய்யப்படும் என்று இன்று காலை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்திருந்தார்கள்.


எனவே ஜனவரி 13 முதல் பொங்கல் விடுமுறை என்ற அறிவிப்பு வெளிவரும் என அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்    இந்த நிலையில் இப்போது வரை இது குறித்த எந்த அறிவிப்பும் வரவில்லை என்பதும் இனிமேலும் வர வாய்ப்பில்லை என்றும் அரசு வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளன. எனவே ஜனவரி 13 மற்றும் ஜனவரி 14 ஆகிய இரண்டு நாட்களும் வேலை நாட்கள் என்ற கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்  இருப்பினும் ஒரு சில ஆசிரியர்கள் இதுகுறித்து கருத்து கூறிய ஜனவரி 13, 14 ஆகிய தேதிகளில் விடுமுறை விடப்பட்டால் அதற்கு பதிலாக இரண்டு சனிக்கிழமைகளில் வேலை செய்ய வேண்டும். நாங்கள் சனிக்கிழமைகளில் வேலை செய்வதை விரும்பவில்லை எனவே விடுமுறை அளிக்காதது எங்களுக்கு சந்தோசமே என்று கூறியுள்ளனர். இருப்பினும் வெளியூர் செல்லும் ஊழியர்கள் தொடர்ச்சியான விடுமுறை கிடைக்காததால் அதிருப்தி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: POLIMER NEWS

9 comments:

  1. But private school always running teachers also working to them no pongalthen all Saturday working day it's good decision

    ReplyDelete
  2. இருக்கு ஆனா இல்ல

    ReplyDelete
  3. நாளைக்கு எதுக்கு லீவு...?
    லீவு விட்டா செலவு அதிகம்

    ReplyDelete
  4. சனிக்கிழமை பள்ளி வைத்தால் மாணவர்கள் அதிகம் வருவதில்லை.

    ReplyDelete
  5. எங்கள் பள்ளி மாணவர்கள் ஏற்கனவே பொங்கல் விடுமுறை யினை தொடங்கி விட்டார்கள், ஆம்,
    நேற்று சனி கிழமை கூட(11.01.2020) கூட 50% மாணவர்கள் தான் பள்ளிக்கு வந்தார்கள், திங்கள் கிழமை அன்று 25% கூட வருவது சந்தேகமே!!
    தமிழர் திருநாள் என்றால் அப்படித்தான் கிராமத்தில் நானும் சிறு வயதில் கொண்டாடி மகிழ்ந்தேன்...

    ReplyDelete
  6. அரசு பள்ளிகளை பொறுத்தவரை ஒரு பொறுப்புமிக்க குடிமக்களை (CITIZENS) உருவாக்குவது.

    கல்வியிலும் , விளையாட்டிலும் , அரசியல் தலைவர்களையும் நேர்மையான மாணவர்களை உருவாக்கும் இடம்.


    வெறும் மதிப்பெண் பெறும் இயந்திரம் (Machine) அல்ல அரசு பள்ளி மாணவரகள். அவர்கள் உயிரோட்டமுள்ள இன்றைய குழந்தைகள் , நாளைய இளைய தலைமுறையினர்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி