DGE - பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2020 தனித்தேர்வர்கள் சேவை மையங்கள் ( Service Centre ) மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்தல் தொடர்பாக இயக்குநரின் செயல்முறைகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 13, 2020

DGE - பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2020 தனித்தேர்வர்கள் சேவை மையங்கள் ( Service Centre ) மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்தல் தொடர்பாக இயக்குநரின் செயல்முறைகள்!


நடைபெறவிருக்கும் மார்ச் 2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுத ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 06 . 01 . 2020 முதல் 13 . 01 . 2020 வரையிலான நாட்களுக்குள் , ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்கள் சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் விண்ண ப்பிப்பதற்கு 20 . 01 . 2020 மற்றும் 21 . 01 . 2020 ஆகிய தேதிகளில் , அரசுத் தேர்வு சேவை மையங்களுக்கு ( Service Centres ) சென்று பதிவு செய்யுமாறு தனித்தேர்வர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது .

அவ்வாறு சேவை மையங்களுக்கு 20 . 01 . 2020 முதல் தேர்வர்கள் வருகைபுரிவார்கள் . அவ்வாறு வருகைபுரிவோருக்கு கீழ்க்கண்டவாறு ஆன் - லைன் மூலம் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய தங்களது ஆளுகைக்குட்பட்ட சேவை மையங்களை ( Service Centres ) அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

1 . 20 . 01 . 2020 காலை முதல் தேர்வர்கள் சேவை மையங்களுக்கு வருகைபுரிவார்கள் . அவ்வாறு வருகைபுரிவோரிடம் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்ட உரிய ஆவணங்களைப் பெற்று சேவை மையங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள User ID மற்றும் Password - ஐ கொண்டு ஆன் - லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

2 . www . dge . tn . gov . in என்ற இணையதளத்தில் , சேவை மையத்திற்கென வழங்கப்பட்டுள்ள User ID மற்றும் Password - ஐ பயன்படுத்தி நுழைந்தவுடன் , சேவை மையங்கள் எவ்வாறு விண்ணப்பங்களைப் பெற வேண்டும் என்பதற்கான அறிவுரைகளைக் கொண்ட பக்கம் தோன்றும் . அவ்வறிவுரைகளைப் பின்பற்றி விண்ணப்பங்களை ஆன் - லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

3 . சேவை மையங்களில் விண்ண ப்பங்கள் பெறப்படுவதற்கு 13 . 01 . 2020 அன்று கடைசி தேதியாகவும் , சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் ( தக்கல் ) விண்ண ப்பங்கள் பெறப்படுவதற்கு 21 . 01 . 2020 அன்று கடைசி தேதியாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடைசிநாள்வரை பெறப்பட்டுப் பதிவு செய்த விண்ணப்பங்களை மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் 22 . 01 . 2020 அன்று ஒப்படைக்குமாறு சேவை மையங்களுக்கு அறிவுறுத்த வேண்டும் .

4 . தேர்வர்களது அனைத்து விபரங்களடங்கிய பட்டியலுடன் தேர்வர்களிடமிருந்து பெறப்படும் தேர்வுக் கட்டணத்தொகையினையும் ( தக்கல் கட்டணத்தினையும் சேர்த்து ) பார்வையில் காணும் அரசாணையின்படி ஆன் - லைன் பதிவுக்கட்டணமாக ஒவ்வொரு தேர்வரிடமிருந்து பெறப்படும் ஆன்லைன் கட்டணத்தொகையினையும் ( 50 X விண்ண ப்பதாரர்கள் ) 22 . 01 . 2020 அன்று மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்களில் தொகையாக ( Incash ) ஒப்படைக்குமாறு அனைத்து சேவை மையங்களையும் அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

விண்ணப்பங்களை ஆன் - லைனில் பதிவேற்றம் செய்தல் தொடர்பாக ஏதேனும் ஐயங்கள் எழுமாயின் அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்களையும் , கீழ்க்குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணையும் தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் சேவை மையங்களுக்கு அறிவுறுத்துமாறும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது .


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி