Flash News : Plus One ( +1 ) Practical Examination 2020 - DGE Instructions And Time Table Published! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 9, 2020

Flash News : Plus One ( +1 ) Practical Examination 2020 - DGE Instructions And Time Table Published!


மார்ச் 2020 மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதும் மாணாக்கருக்கு செய்முறைத் தேர்வுகள் எழுத்துத் தேர்வுகளுக்கு முன்னதாக நடத்தப்படவேண்டும் . பார்வையில் காணும் அரசாணையில் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றியே செய்முறைத் தேர்வு பாடங்களுக்கு மதிப்பெண்கள் வழங்க வேண்டும் . மேல்நிலை முதலாம் ஆண்டு மாணவர்களது செய்முறைத் தேர்வு மதிப்பெண்களை பதிவு செய்வதற்கு ஏதுவாக , ஒவ்வொரு பாடத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பாடக் குறியீடுகள் ( Subject codes for Practical ) விவரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது .

Plus One ( +1 ) Practical Examination 2020 - DGE Instructions And Time Table - Download here

பள்ளி மாணாக்கருக்கு ( Regular candidates ) செய்முறைத் தேர்வு நடத்துதல்

1 . பள்ளித் தலைமையாசிரியர்கள் 31 . 01 . 2020 முதல் 24 . 02 . 2020 வரையிலான நாட்களில் www . dge . tn . gov . in என்ற இணையதளத்தில் , தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள User ID மற்றும் Password - ஐ பயன்படுத்தி , மேல்நிலை முதலாம் ஆண்டு செய்முறைத் தேர்வுக்கான வெற்று மதிப்பெண் பட்டியல்களை அனைத்து தேர்வர்களுக்கும் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் .

2 . மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதும் பள்ளி மாணாக்கருக்கு , பொதுப்பிரிவு மற்றும் தொழிற்கல்வி பாடங்களுக்கான செய்முறைத் தேர்வுகள் புதிய பாடத்திட்டத்தின்படி , 14 . 02 . 2020 முதல் 25 . 02 . 2020 வரையிலான நாட்களில் கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும் .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி