Flash News : PTA - 3624 தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான அரசாணை வெளியீடு ( GO NO : 35 , DATE : 30.01.2020 - Primary And Upper Primary Temporary Teachers Appointment GO - Download ) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 1, 2020

Flash News : PTA - 3624 தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான அரசாணை வெளியீடு ( GO NO : 35 , DATE : 30.01.2020 - Primary And Upper Primary Temporary Teachers Appointment GO - Download )


PTA - Primary And Upper Primary  Temporary  Teachers Appointment GO - Download here

ஊராட்சி ஒன்றிய / அரசு / நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்திடமிருந்து தகுதியான நபர்களின் தெரிவுப் பட்டியல் பெறப்படும் வரை மாணவர்களின் நலன் கருதி அந்தந்த பெற்றோர் ஆசிரியர் கழகம் / பள்ளி மேலாண்மைக்குழு வாயிலாக மாதம் ரூ . 7 , 500 / - தொகுப்பூதியத்தில் பிப்ரவரி 2020 முதல் ஏப்ரல் 2020 வரை மூன்று மாதங்களுக்கு ஊதியம் வழங்கும் வகையில் பார்வையில் காண் அரசாணையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது .

மேலும் இப்பொருள் சார்ந்து கீழ்கண்ட விவரங்கள் தெரிவிக்கப்படுகிறது .

* தற்போது ஊராட்சி ஒன்றிய / அரசு / நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 3624 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை பிப்ரவரி - 2020 முதல் ஏப்ரல் - 2020 முடிய மூன்று மாதங்களுக்கு மட்டும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பெற்றோர் ஆசிரியர் கழகம் / பள்ளி மேலாண்மைக்குழு வாயிலாக மட்டும் அந்ததந்த ஊர்களில் அந்தந்த பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அருகாமையில் உள்ள பகுதியில் உள்ள தகுதியுள்ள நபர்களை சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர் , பெற்றோர் ஆசிரியர் கழகம் / பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களைக் கொண்ட குழு மூலமாக தற்காலிகமாக நிரப்பிக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது .

* அவ்வாறு தெரிவு செய்யும் பொழுது இது முற்றிலும் தற்காலிகமானது என்பதை தெரிவு செய்யப்படும் நபர்களுக்கு தெரிவிக்கப்படவேண்டும் . இவ்வாறு தெரிவு செய்யும் நபர்களை இடைநிலை ஆசிரியர் பதவிக்கு மட்டுமே நிரப்பி கொள்ள வேண்டும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது . இவ்வாறு தற்காலிகமாக பெற்றோர் ஆசிரியர் கழகம் / பள்ளி மேலாண்மைக்குழு வாயிலாக தெரிவு செய்யப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூ . 7 , 500 / - வீதம் தொகுப்பூதியம் வழங்கப்படும் .

நிபந்தனைகள்

* ஊராட்சி ஒன்றிய / அரசு / நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் கல்வி நலன் கருதியும் அவர்களின் கல்விச் செயல்பாடுகளை மேம்படுத்தும் பொருட்டு இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களில் உடனடியாக மாற்று ஏற்பாடு செய்ய வேண்டியுள்ளது . ஊராட்சி ஒன்றிய / அரசு / நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் மட்டுமே ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக இடைநிலை ஆசிரியர் பணிக்காக தகுதி பெற்ற நபர்களைக் கொண்டு நிரப்பி கொள்ள வேண்டும் .

* இடைநிலை ஆசிரியர் கல்வித்தகுதி பெற்ற நபர்களை பார்வையில் காண் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள உறுப்பினர் கொண்ட குழுவின் மூலம் பெற்றோர் ஆசிரியர் கழகம் / பள்ளி மேலாண்மைக்குழு வாயிலாக எவ்வித புகார்களுக்கும் இடமின்றி நிரப்பி கொள்ள வேண்டும் .

* பிப்ரவரி - 2020 முதல் ஏப்ரல் - 2020 முடிய மூன்று மாதங்களுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்ப அரசாணையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் , அக்காலகட்டத்திற்குள் தொடர்புடைய பாடப்பகுதிகள் ( Portion ) அனைத்தும் அவ்வாசிரியரால் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்பதோடு இதனை சம்மந்தப்பட்ட பள்ளித்தலைமையாசிரியர் தொடர்ந்து கண்காணித்தல் வேண்டும் .

* மேலும் , இந்நடவடிக்கைகள் பள்ளிப் பார்வையின் போது தொடர்புடைய முதன்மைக் கல்வி அலுவலர் , மாவட்டக் கல்வி அலவலர் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களால் உறுதி செய்யப்பட வேண்டும் . மேற்கண்ட ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் அரசாணையின்படி தொடக்கக் கல்வி இயக்ககத்திலிருந்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்படும் . முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேற்கண்ட தொகையை பெற்றோர் ஆசிரியர் கழகம் / பள்ளி மேலாண்மைக்குழுவிற்கு உடன் விடுவிக்க வேண்டும் .

* இவ்வாறு பெறப்படும் நிதி தொகுப்பூதியத்தில் நிரப்பப்படும் ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் வழங்க வேண்டும் .

* மேலும் , இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களில் தொகுப்பூதியத்தில் நிரப்பப்படும் நபர்களுக்கு வழங்கப்படும் தொகுப்பூதியத்திற்கான ஒப்புகைச்சீட்டு சார்ந்த பள்ளித்தலைமையாசிரியரால் பராமரிக்கப்பட வேண்டும் . இது தணிக்கைக்கு உட்பட்டது ஆகையால் ஒப்புகைச் சீட்டு பள்ளித் தலைமையாசிரியரின் முழுக்கட்டுப்பாட்டில் இருத்தல் வேண்டும் . பெற்றோர் ஆசிரியர் கழகம் / பள்ளி மேலாண்மைக்குழு வாயிலாக அனுமதிக்கப்பட்ட காலிப் பணியிடங்களில் தொகுப்பூதியத்தில் தற்காலிகமாக நிரப்பப்படும் இடைநிலை ஆசிரியர்கள் 2019 - 2020 - ம் கல்வியாண்டின் கடைசி பள்ளி வேலை நாளன்று உடனடியாக பணிவிடுப்பு செய்யப்பட வேண்டும் .

* இவ்வாறாக பெற்றோர் ஆசிரியர் கழகம் / பள்ளி மேலாண்மைக்குழு வாயிலாக தற்காலிக அடிப்படையில் தொகுப்பூதியத்தில் நிரப்பப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமனம் ஆணை வழங்கக்கூடாது . மேலும் , இவ்வாசிரியர்களின் பெயர்கள் எந்த காரணத்தைக் கொண்டும் அரசு ஆசிரியர்களின் வருகைப் பதிவேட்டில் பதிவு செய்தல் கூடாது மற்றும் பணிச்சான்று எதுவும் வழங்குதல் கூடாது . இக்கடிதத்தில் தங்கள் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணியிடங்களின் எண்ணிக்கைக்கேற்ப இவ்வரசாணையின் அடிப்படையில் காலிப்பணியிடங்களை தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் மூன்று மாதங்களுக்கு மட்டும் நிரப்பிக் கொள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது .

* இவ்வாறாக பெற்றோர் ஆசிரியர் கழகம் / பள்ளி மேலாண்மைக்குழு வாயிலாக தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் விவரம் பள்ளி வாரியாக தொகுத்து இவ்வியக்ககத்திற்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது .

37 comments:

  1. Loosa....?!
    Mentallaa...?!
    😁😀😁😀

    ReplyDelete
  2. Tamilnattukku sothani kalam.innum oru varudam poruthunga. Anaithu teachers oru sarnthu ivargalukku opposite aga piracharam pannalam

    ReplyDelete
  3. இந்த அறிவிப்பு ச்சும்மா கிழி...

    செங்கோட்டை தர்பார்

    ReplyDelete
  4. Tet trb pass Panna candidate all candidate Ku any idea government how ?

    ReplyDelete
  5. Vacancy ye illa nu court varai poi solliya piragu indha vacancy eppadi vandhadhu.....TET 2013 La pass pannavangala vachu posting poda vendiyadhu dhana...

    ReplyDelete
    Replies
    1. Appo 17 19 batch enna panna?

      Delete
    2. Selfish ah think pannathinga hamath 2017 and 19 la yaarum Tet pass pannalaiyaa? Yeen intha perasai...

      Delete
    3. Govt TET pass pannuna candidate yaraiyum mathikave matinguthu. Neenga 2013, 17,19 nu sanda pottukittu irukinga...

      Delete
  6. Tet pass panni velaikku vandhavangalaye block junior, deployment,surplus teachers solli sec grade tr to kg,BT Asst to sec grade tr akittaanga.ketta vacantte illa...ippo indha posting podarathukku mattum enga irundhu vacant vandhuchu?Examkku kashtappattu padichi andha velaikku viruppapattu vandhadhan andha vali theriyum. Evlo per tet pass pannittu irukkaanga avangalukku job kodukkaama,summa temporary posting kadupethikkittu..

    ReplyDelete
  7. இந்த நியமனம் எந்த முறைகேடும் இல்லாமல் நடைபெற வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. Epti select pannuvanga.... Ethum apply pannanum ma

      Delete
    2. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அவர்களுக்கு கட்டிங் கொடுத்தால் போதும் மாதம் 2000 ரூபாய் சம்பளத்தில் மூன்று மாதத்திற்கு 6 ஆயிரம் கிடைக்கும்.

      Delete
  8. ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்த ஆளே இல்லை.அதான் இந்த 3 மாத காண்ட்ராக்ட்.

    ReplyDelete
  9. Dont join the part time teacher....lot of tet pass candidates 2013,17,19 ....ivanugaluku vote podathinga... intha vacant poradinal kidaikkum tet candidates ku.......

    ReplyDelete
  10. Pls pls pls pls yarum poi serathinga nammala intha amaichar game aduran

    ReplyDelete
  11. Pls Don't join the job. Because the government play in tet passed candidate life.

    ReplyDelete
  12. கல்வி அறிவே இல்லாத mla இக்கு 100000 சம்பளம் டீச்சர் சம்பளம் 7500 வாழ்க ஜனநாயகம். ..

    ReplyDelete
  13. தயவு செய்து யாரும் இந்த வேலைக்கு போகாதீர்கள் இவான் tet பாஸ் ஆனவுங்க வாழ்க்கையில விளையாடுறான்

    ReplyDelete
  14. Replies
    1. Pass ana tet kea valiya kanum. Next 500 rs waste

      Delete
  15. Yaravathu aided school la BT assistant appointment agi salary varama irukka.please inform me

    ReplyDelete
  16. ஆசிரியர் பொழப்பு நாய் பொழப்பு .இவனுங்க கொடுக்கற 7500 சம்பளத்துக்கு நாயவிட கேவளமா நடத்துவானுங்க தலைமையாசிரியர் எல்லாத்தையும் சுருட்டி சாப்டுட்டு 2 வருஷம் கழிச்சு சம்பளம் குடுப்பாரு போயிடாதிங்க பெருமக்களே மரியாதையே இருக்காது 50000 சம்பளம் வாங்கறவனுக்கு அடிமை வேளையெல்லாம் செய்யனும்.

    ReplyDelete
  17. அமுதசுரபி பயிற்சி மையம்
    PG TRB - தமிழ்
    கிருஷ்ணகிரி

    கடந்த ஆண்டு தேர்வில் (தமிழ் பாடத்தில்)மாநிலத்தில் இரண்டாம் இடம்.....
    Contact :9344035171, 98421385171

    (Tamil + Education )...

    ReplyDelete
  18. Class starts from 08/02/2020... saturday

    ReplyDelete
  19. TRB POLYTECHNIC SUBJECT ENGLISH.ON LINE TEST UNIT AND MODEL TEST SAIKRISHNA COACHING CENTER. CONTACT 7010926942.

    ReplyDelete
  20. TRB LECTURER FOR POLYTECHNIC. SUBJECT ENGLISH. ON LINE TEST. SAIKRISHNA COACHING CENTER CONTACT 7010926942

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி