Flash News : TRB - உதவிப்பேராசிரியர் பணித்தெரிவிற்கு கூடுதல் சான்றிதழ் விவரங்களை பதிவேற்றம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் கால அவகாசம் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 23, 2020

Flash News : TRB - உதவிப்பேராசிரியர் பணித்தெரிவிற்கு கூடுதல் சான்றிதழ் விவரங்களை பதிவேற்றம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் கால அவகாசம் அறிவிப்பு.


அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவிப்பேராசிரியர் பணித்தெரிவிற்கு விண்ணப்பிக்க ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கை எண் . 12 / 2019 , நாள் . 28 . 08 . 2019 மற்றும் 04 . 10 . 2019 அன்று வெளியிடப்பட்டது .

1) மேற்காணும் பணியிடங்களுக்கான இணையவழியாக விண்ணப்பிக்க இறுதி நாள் 30 . 10 . 2019 என அறிவிக்கப்பட்டு 15 . 11 . 2019 மாலை 5 . 00 மணி வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு வழங்கப்பட்டது .

2 ) மேலும் , அனைத்து விவரங்களையும் முழுமையாக பூர்த்தி செய்து விண்ணப்பக்கட்டணம் செலுத்தாத 804 விண்ணப்பதாரர்கள் மற்றும் பணி அனுபவச் சான்று பதிவேற்றம் செய்திடாத 174 விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் அவர்களின் பணி அனுபவச் சான்றினை பதிவேற்றம் செய்திடவும் , விண்ணப்பக் கட்டணம் செலுத்திடவும் 19 . 12 . 2019 முதல் 21 . 12 . 2019 வரை வாய்ப்பு வழங்கப்பட்டது .

3 ) இந்நிலையில் , அப்பணித்தெரிவிற்கான சான்றிதழ் சரிபார்ப்பு மேற்கொள்ள கூடுதல் விவரங்கள் தேவைப்படுவதால் , அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான உதவிப்பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் மட்டும் ( கல்வியியல் கல்லூரிகள் தவிர்த்து ) இணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேவைப்படும் கூடுதல் விவரங்களை 22.01.2020 முதல் 28.01.2020 மாலை 5 மணி வரை இணையவழி மூலமாக தவறாது பதிவேற்றம் செய்திட வேண்டும் எனவும் , எக்காரணம் கொண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்படமாட்டாது என்பதால் விரைவான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது .

Document upload Page - Click here...

3 comments:

  1. Computer centrekalil thavarukal nadaiperuvathaal athai thiruthi amaikka time thevai. So kaala neettippu mihavum avaisiyam. Athuku thiruthi amaokkakoodiya vaaippai erpaduthi kodukka venum.

    ReplyDelete
  2. Trb board computerkalil thiruthi amaikkakoodiya vaaippai

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி