Plus One & Plus Two - Internal Mark Online Uploading Time Table, HM Certificate And Uploading Instructions DGE Published! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 11, 2020

Plus One & Plus Two - Internal Mark Online Uploading Time Table, HM Certificate And Uploading Instructions DGE Published!


2019 - 2020 கல்வியாண்டில் மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு பள்ளியில் வழங்கப்பட்ட அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்களை பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யவேண்டும் .

1 . அகமதிப்பீட்டிற்கான பாடக் குறியீடுகள்

மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களது அகமதிப்பீட்டு மதிப்பெண்களை பதிவு செய்வதற்கு ஏதுவாக , ஒவ்வொரு பாடத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பாடக் குறியீடுகள் ( + 1 and + 2 Subject codes for Internal marks ) விவரம் இத்துடன் இணைத்தனுப்பப்படுகிறது .

2 வருகைப் பதிவிற்கான மதிப்பெண்களை கணக்கிடுதல்

2019 - 2020 கல்வியாண்டின் ஆரம்ப நாள் முதல் 31 . 01 . 2020 வரை மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரிந்த நாட்களைக் கணக்கிட்டு , அதன் அடிப்படையில் வருகைப் பதிவிற்கான மதிப்பெண்களை பார்வை 3 - ல் காணும் செயல்முறைகளில் வழங்கப்பட்ட அறிவுரைகளைப் பின்பற்றி கணக்கிட வேண்டும் .

3 . அகமதிப்பீட்டு மதிப்பெண்கள் வழங்குதல் தொடர்பான கூடுதல் அறிவுரைகள்
( i ) பள்ளி மாணவர்களில் , நீண்ட நாட்கள் பள்ளிக்கு வருகை புரியாமல் இருத்தல் உள்ளிட்ட காரணங்களால் ஏதேனும் ஒரு மாணவருக்கு வருகைப்பதிவு / உள்நிலைத்தேர்வு / ஒப்படைவு ஆகியவற்றிற்கு மதிப்பெண்கள் ஏதும் வழங்கப்படாமலிருந்தால் , 0 மதிப்பெண் வழங்கப்பட்டதாக பதிவு செய்ய வேண்டும் .
( ii ) மொழிப்பாட விலக்கு ( Language Exemption ) பெற்ற மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு , விலக்கு பெற்ற மொழிப்பாடத்திற்கு அகமதிப்பீட்டு மதிப்பெண் 0 என பதிவு செய்ய வேண்டும் .

4 . வெற்று மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்தல் பள்ளித் தலைமையாசிரியர்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பிற்சேர்க்கையில் குறிப்பிட்டுள்ள நாட்களில் அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்திற்குச் ( www . dge . tn . gov . in ) சென்று தங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள USER ID மற்றும் Password - ஐ பயன்படுத்தி , மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கான பெயர்பட்டியலில் இடம் பெற்றுள்ள தங்களது பள்ளி மாணவர்களது அகமதிப்பீட்டு மதிப்பெண்களை பதிவு செய்வதற்கான வெற்று மதிப்பெண் பட்டியல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும் .

5. வெற்று மதிப்பெண் பட்டியலை பூர்த்தி செய்து , அக மதிப்பீட்டிற்கான மதிப்பெண்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்தல் பார்வை 3 - ல் காணும் செயல்முறைகளில் குறிப்பிட்டவாறு மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகளுக்கு தயாரிக்கப்பட்டுள்ள அகமதிப்பீடு மதிப்பெண்களுக்கான ஒருங்கிணைக்கப்பட்ட படிவத்தில் உள்ளவாறு , ஒவ்வொரு பாடத்திற்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்களை , மேற்குறிப்பிட்டவாறு பதிவிறக்கம் செய்த மதிப்பெண் பட்டியலில் பதியவேண்டும் . அதன் பின்னர் , அம்மதிப்பெண்களை தலைமையாசிரியர் தங்களுக்கு வழங்கப்பட்ட USER ID மற்றும் Password - ஐ பயன்படுத்தி , பிற்சேர்க்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தேதிகளில் இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும் .

6. பெயர்பட்டியலில் இடம் பெற்றுள்ள தங்கள் பள்ளி மாணவர்கள் அனைவரது அக மதிப்பீட்டு மதிப்பெண்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை பள்ளி தலைமையாசிரியர் உறுதி செய்து கொள்ள வேண்டும் . எந்த ஒரு மாணவரது மதிப்பெண்களும் பதிவேற்றம் செய்யப்படாமல் இருத்தல் கூடாது .

Download - DGE Internal Mark Full Instructions ( pdf )

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி