ஆசிரியரின்றி உள்ள உபரிக் காலிப்பணியிடங்களை ( Surplus Post Without Person ) இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு சரண் செய்த பணியிடங்களின் பட்டியல் ( மாவட்ட வாரியாக) வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 23, 2020

ஆசிரியரின்றி உள்ள உபரிக் காலிப்பணியிடங்களை ( Surplus Post Without Person ) இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு சரண் செய்த பணியிடங்களின் பட்டியல் ( மாவட்ட வாரியாக) வெளியீடு.

01.08.2018 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியாளர் நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டதில் , பாடவாரியாக ஆசிரியரின்றி உபரி எனக் கண்டறியப்பட்ட பணியிடங்களை ( Surplus Post Without person ) இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு ஒப்படைக்க சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது .

அதனடிப்படையில் ஆசிரியரின்றி உள்ள உபரிக் காலிப்பணியிடங்களை ( Surplus Post Without Person ) பார்வை - 2ல் காணும் கடிதங்களின் வாயிலாக சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்களால் இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு சரண் செய்திட விவரங்கள் பெறப்பட்டுள்ளது .

இப்பணியிடங்களை இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு கொண்டுவரப்பட்டள்ளதால் அதனை ஏற்பளித்து ஆணை வழங்கப்படுகிறது . மேலும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ள ( ஆசிரியரின்றி உள்ள உபரிப் பணியிடங்களை ) பணியிடங்களை வருங்காலங்களில் காலிப்பணியிடங்களாகவோ , அனுமதிக்கப்பட்ட பணியிடங்களாகவோ கருத கூடாது என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது .

இது குறித்து சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று அந்தந்த பள்ளிகளில் பராமரிக்கப்படும் அளவைப் பதிவேட்டில் ( Scale Register ) உரிய பதிவுகள் ( பள்ளிக் கல்வி இயக்குநர் பொதுத் தொகுப்புக்கு சரண் செய்யப்பட்டது என்ற பதிவினை ) மேற்கொள்ளும் வகையில் தக்க நடவடிக்கை மேற்கொள்ளமாறும் , அதனை அடுத்து வரும் தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் சரிபார்த்து உறுதி செய்து கொள்ளவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது .

இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு சரண் செய்த உபரி பணியிடங்களின் பட்டியல் ( மாவட்ட வாரியாக) - Download here

27 comments:

  1. When will they approve Aided school posts sir

    ReplyDelete
    Replies
    1. இன்னும் 10ஆண்டுகக்குப் பின் மாணவரும் ஆசிரியரும் இன்றி கல்விக்கூடங்கள் உபரி என அறிவிக்கப் பட்டு அரசிடம் ஒப்படைத்ததால் அக்கல்விக்கூடங்களை அரசு
      டாஸ்மார்க் கடைகளாக அறிவித்து ஆணைபிறப்பித்து வெளியிடும்.
      5,8ஆம் வகுப்புத்தேர்வே இதை நோக்கித்தான்

      Delete
    2. No,மன்னிக்கவும் ஆசிரியர் பணியை அளவிட மற்றும் கற்றல் திறனைசே ாதிக்க

      Delete
    3. No,மன்னிக்கவும் ஆசிரியர் பணியை அளவிட மற்றும் கற்றல் திறனைசே ாதிக்க

      Delete
  2. Xavier sir i am also applied aided school post but not granted permission

    ReplyDelete
    Replies
    1. Unknown frnd pls call 9791286246

      Delete
    2. Sir i got permission and also i am working past 14 months Still not not get aproval.is it possible sir

      Delete
  3. Ama aided school ku permission thara maatanga ..epo tharuvanga nu idea iruka sir ??..

    ReplyDelete
  4. Please kindly reply sir Aided School Non Teaching Postings ku Approval Varuma sir .I mean posting pottu adhukana Approval CEO pannuvangala Sir

    ReplyDelete
    Replies
    1. Director only responsible . Court will help us

      Delete
    2. From Thanjavur one junior assistant got an order from madurai high court

      Delete
    3. Sir post approval ஆச்சா... Salary வந்த்ருச்சா.. reply pannunga Xavier sir

      Delete
    4. Yes .St'Antony Hr.sec school

      Delete
    5. Its basis of compassionate posting or some other vacancy

      Delete
  5. Why are you calling Tet 2020 education department sir

    ReplyDelete
  6. அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த முயற்சிக்காமல் அரசு பள்ளிகளை மூடிவிட்டு டாஸ்மாக் கடைகள் திறக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறது...

    ReplyDelete
  7. அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த முயற்சிக்காமல் அரசு பள்ளிகளை மூடிவிட்டு டாஸ்மாக் கடைகள் திறக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறது...

    ReplyDelete
  8. Ithink that CEOs are not able to sanction or approve the permanent post without prior permission of DSE.
    .

    ReplyDelete
  9. Ithuvaraikum eluthuna tet exam la pass panunavangaluku job kudupangala ilaya

    ReplyDelete
  10. எனக்கு CEO permission கொடுத்து முறையான interviW ,ேபப்பர் விளம்பரம் கொடுத்து பின்னர் appoinment வாங்கி 14 மாதங்களாக சம்பளம் இல்லாமல் ேவலை பார்க்கிறேன். இன்னும் எனக்கு approval கொடுக்கல. கிடைக்குமா? kindly reply anyone Sir? What i do next

    ReplyDelete
  11. நாசமா போச்சு கல்வித்துறை

    ReplyDelete
  12. I have a doubt yarna 2019 aprila apuram bt posting potu irukangala yarkuna konjam sollunga pls

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி