TNPSC : குரூப்-4 தேர்வு முறைகேடு அதிகாரிகள் நாளை முக்கிய முடிவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 19, 2020

TNPSC : குரூப்-4 தேர்வு முறைகேடு அதிகாரிகள் நாளை முக்கிய முடிவு!


குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆலோசனை நடத்த இருக்கின்றனர்.

அதன்அடிப்படையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.குரூப்-4 பதவிகளில் அடங்கிய பணிகளுக்கான எழுத்து தேர்வு கடந்த ஆண்டு (2019) செப்டம்பர் மாதம் 1-ந்தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது.

இதற்கான தரவரிசை பட்டியல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது.அதில் முதல் 100 இடங்களுக்குள் இடம்பிடித்து இருந்தவர்களில் 35 பேர் ராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட ராமேசுவரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்களாக இருந்ததாலும், அவர்கள் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களாக இருந்ததாலும் மற்ற தேர்வர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.இதுதொடர்பாக தேர்வர்கள் பலர் இந்த தேர்வில் முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்பு இருப்பதாக புகார் தெரிவித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் ராமேசுவரம், கீழக்கரை தேர்வு மையங்களில் முதல் 100 இடங்களுக்குள் 35 இடங்களை பிடித்தவர்களை நேரடியாக அழைத்து விசாரிக்கமுடிவு செய்யப்பட்டது.

இதுதவிர ராமேசுவரம், கீழக்கரை தேர்வு மையங்களில் அந்த பகுதிகளை சேர்ந்தவர்களை தவிர்த்து, பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களாக இருந்து அங்கு தேர்வு எழுதியவர்களையும் விசாரணைக்கு அழைத்து இருந்தனர்.அதன்படி, கடந்த 13-ந்தேதி காலையில் விசாரணை தொடங்கியது. சம்பந்தப்பட்ட தேர்வர்கள் நேரில் ஆஜராகி விளக்கத்தை அளித்தனர்.

இந்த விசாரணை மறுநாள் அதிகாலை வரை விடிய விடிய நடத்தப்பட்டது.சம்பந்தப்பட்டவர்களிடம் டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் துருவித்துருவி கேள்விகள் கேட்டனர். விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்தவர்களில் பெரும்பாலானோரின் பதில்கள் ஒரே மாதிரியாக இருந்ததாக டி.என்.பி.எஸ்.சி. வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சம்பந்தப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், முக்கிய முடிவுகள் எடுப்பதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் நந்தகுமார், தேர்வுகட்டுப்பாட்டு அலுவலர் சுதன் ஆகியோரின் தலைமையில் அதிகாரிகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆலோசனை நடத்த உள்ளனர்.ஆலோசனையில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாகவும், அதுகுறித்ததான உரிய அறிவிப்பு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) வெளியாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

25 comments:

  1. தேர்வை ரத்து செய்து புதிதாக தேர்வு நடத்த வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. அப்போ பாஸ் பன்னவன் எல்லாம் ேகனயா

      Delete
    2. அப்டி கேளுய்யா அப்பவும் ரோசம் வராது அவனுகள இனி எக்ஸாம் எழுத allow பண்ணக்கூடாது

      Delete
    3. Etharkku thervu rathu.. Thavaru seithavanai neekkam seithu thandanai valanginaal sari..

      Delete
    4. அரசு அதிகாரிகள் அனுமதி இன்றி இந்த செயல் நடந்திருக்க வாய்ப்பில்லை

      Delete
  2. Dei vilunthu vilunthu padicchathellam waste aah? 😢

    ReplyDelete
  3. Rankil select annalum cut of mark selection best method

    ReplyDelete
  4. Cut of mark best selection group 4all exams

    ReplyDelete
  5. PG trb computer exam kadha dha all are frauds

    ReplyDelete
  6. ....ம்ம்ம்.... என்னத்த சொல்ல....

    ReplyDelete
  7. தவறு செய்தவர்களை தண்டிக்க வக்கின்றி தேர்ச்சி பெற்றவர் அனைவரையும் பாதிக்கும் முடிவெடுத்தால் அது பெரும்தவறு.இயற்கை நீதிக்கு முரணானது.குற்றவாளிகளை தண்டிக்காமல் அப்பாவிகளைபாதிப்புக்கு உள்ளாக்குவது மிகப்பெறுறும் தவறாகமுடியும்

    ReplyDelete
  8. முறைகேடு செய்தவர்களை கல்லால் அடித்தே கொல்ல வேண்டும் !

    ReplyDelete
  9. Olunga padichu pass panunavaga rompa kasta paduvaga

    ReplyDelete
  10. Dontworry friends kandippa தேர்வு ரத்தாகாது......

    ReplyDelete
  11. தவறுகள் ஒர் இடத்தில் மட்டும் நடந்ததா இல்லை தமிழகம் முழுவதிலுமா?

    ReplyDelete
  12. அனைத்து மவட்டங்களிலும் முறைகேடு nadanthullatha என்று மேலதிகாரிகள் ஆராய்வு செய்தால் நன்றாக படித்தவர்கள் செலக்ட் ஆகாமல் இருக்கிறார்களா என்று தெரிந்து கொண்டு அந்த தேர்வர்களை உரிய பணியிடத்தில் வேலை செய்யும் வகையில் புதிய தலைமுறை அதிகாரி

    ReplyDelete
  13. Hard work panni padichu select agiruvomnu ninachutu irukkuravanga mananilamaiya tnpsc purunju mudivu edukkanum. Fraud pannunavangala kandupidichu avangala mattum punish pannanum. Totala exam cancelna unmaiya padichu postingu wait panravan paavam illaya. Totala exam cancelna hardwork panni padichu unmaiya select aanavangalulu tnpsc pathil solli aaganum.

    ReplyDelete
  14. TNPSC should consider hardworked candidates who have passed themselves. Exam cancellation will not be the correct solution for fradulent case. Wait for good news friends.

    ReplyDelete
  15. CBCID enquiry vaikanum,but evankaluku help panathu yaru?

    ReplyDelete
  16. INTHA TEAMKU HELP PANNATHU YARUNU KANDUPIDICHU AAGANUM
    SAMETIME INTHA THAPU VERA DISTRICTLA NADANTHUIRUKANNU TNPSC VISARANAI KANDIPA PANNANUM

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி