TNPSC : குரூப்-4 தேர்விற்கான புதிய தரவரிசை பட்டியல் வெளியிட முடிவு ! - kalviseithi

Jan 20, 2020

TNPSC : குரூப்-4 தேர்விற்கான புதிய தரவரிசை பட்டியல் வெளியிட முடிவு !


குரூப்-4 பதவிகளில் அடங்கிய பணிகளுக்கான எழுத்து தேர்வு கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ந்தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இதற்கான தரவரிசை பட்டியல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது.

அதில் முதல் 100 இடங்களுக்குள் இடம்பிடித்து இருந்தவர்களில் 35 பேர் ராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட ராமேசுவரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்களாக இருந்ததாலும், அவர்கள் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களாக இருந்ததாலும் மற்ற தேர்வர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக தேர்வர்கள் பலர் இந்த தேர்வில் முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்பு இருப்பதாக புகார் தெரிவித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் ராமேசுவரம், கீழக்கரை தேர்வு மையங்களில் முதல் 100 இடங்களுக்குள் 35 இடங்களை பிடித்தவர்களை நேரடியாக அழைத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டது.

இதுதவிர ராமேசுவரம், கீழக்கரை தேர்வு மையங்களில் அந்த பகுதிகளை சேர்ந்தவர்களை தவிர்த்து, பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களாக இருந்து அங்கு தேர்வு எழுதியவர்களையும் விசாரணைக்கு அழைத்து இருந்தனர்.

அதன்படி, கடந்த 13-ந்தேதி காலையில் விசாரணை தொடங்கியது. சம்பந்தப்பட்ட தேர்வர்கள் நேரில் ஆஜராகி விளக்கத்தை அளித்தனர். இந்த விசாரணை மறுநாள் அதிகாலை வரை விடிய விடிய நடத்தப்பட்டது.

சம்பந்தப்பட்டவர்களிடம் டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் துருவித்துருவி கேள்விகள் கேட்டனர். விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்தவர்களில் பெரும்பாலானோரின் பதில்கள் ஒரே மாதிரியாக இருந்ததாக டி.என்.பி.எஸ்.சி. வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சம்பந்தப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், முக்கிய முடிவுகள் எடுப்பது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் நந்தகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் ஆகியோரின் தலைமையில் அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினர்.  ஆலோசனையில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

இந்நிலையில் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களை மட்டும் நீக்கிவிட்டு புதிய தரவரிசை பட்டியலை வெளியிட தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அறிவுத்திறன் சோதனையில் புகாரில் தொடர்புடையவர்கள் குறைந்த மதிப்பெண் பெற்றிருப்பதால் முறைகேடு நடந்தது உறுதியாகி இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், கீழக்கரை மற்றும் ராமேசுவரம் ஆகிய இரு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் மீது போலீசில் புகார் அளித்து விசாரணைக்கு உட்படுத்தவும் டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

42 comments:

 1. How to identify all corrupted candidates in Fourteen lakhs .

  ReplyDelete
  Replies
  1. Why to cancel ,then what about the candidates wrote the exam sincerely....

   Delete
 2. Replies
  1. Why to cancel. Many sincerely and dedicatedly spent their whole days for it... They don't be affected. Hard work should get success and be blessed

   Delete
  2. அது எப்படி எந்த exam மா இருந்தாலும் cancel பண்ணனும் என்று ஒரு சில பேர் பதிவிடுகிறீர்கள். கஷ்டப்பட்டு படித்து merit list ல் உள்ளவர்களோட வலி தெரியாத வரை எத்தனை exam வந்தாலும் clear பண்ணப்போறதில்லை. உங்களுக்கு exam தானே வேண்டும். அடுத்த exam ல் நல்லா படித்து merit ல் name வர்ற அளவுக்கு திறமையைக்கா ட்டு. அதை விட்டு விட்டு exam cancel பண்ணனும் என்று தயவு செய்து பதிவு செய்யாதீர்கள். ஏன் என்றால் நானும் group 4 2018 ல் 159 question correct. 1 question ல வேலை கிடைக்கவில்லை இந்த group 4ல் 166 question correct. இப்போதும் வேலை கிடைக்கப்போறது இல்லை. ஆனாலும் exam cancel பண்ணனும் என்று கேட்கமாட்டேன். ஏனெனில் கஷ்டப்பட்டு படிச்சவங்களோட வலி எனக்கு தெரியும். இப்ப group 2க்கு படிக்கிறேன்.

   Delete
  3. Nice me too get 165 so I started studies for next exam

   Delete
  4. நல்லா கருத்து நண்பா...
   ஒரு தேர்வுக்கு 2,3+ வருடமா படிச்சு வேலைக்கு போய்டலாம்னு நம்பிக்கையை வரவச்சுட்டு கடைசியில் தேர்வு ரத்துனு சொன்னா...
   மறுபடியும் படிக்க எப்படி மன நிலை வரும்...
   அரசும், அரசு அலுவலகர்களும் கவனமாக தேர்வு நடத்த வேண்டும்.... இது மட்டுமல்லாது குறுக்கு வழியில் முன்னேற நினைப்பவர்கள் இருக்கும் வரை பலரது வாழ்க்கை கேள்விக்குறி ஆக்கப்பட்டு கொண்டு தான் இருக்கும்...

   Delete
  5. No need to cancel the exam. Romba varshama padichavangalukku tha antha pain therium..ellarum easy ah exam cancel pannunga nu solranga . Nanu this time CV applod pannirukken.But enakku kidaikathu nu therium..but exam cancel panna vendam...evlo per ithukaga kastappattu padichu thevaiyana rank kulla vanthuruppanga, re exam la avanga Oru mark kammiya eduthalum romba rank pinnadi poiruvanga. Pavam...so exam cancel panna kudathu

   Delete
  6. No need to cancel the exam is correct bt thapana nokathula exam pass pannavqqnga should punish this is the fact

   Delete
 3. I have completed MCA..but I didn't get typing course..and I was working IT also...and My mark is 125 in group 4 ...but I'm not selected...99 mark eduthavanga Elam select airunthanga..becoz avanga typing course panirunthanga...enakum typing therium..irunthum ena use...Elam fate

  ReplyDelete
  Replies
  1. Avungalukum velai kidaikaathu kavalaipadatheenga

   Delete
  2. Unga kuda typing certificate erukka

   Delete
  3. Sir,My mark is 234. Yes, I have type...but kidaikathu u enakku therium...last time um...na counselling varaikum poitu vanthen...vacancy mudinchuruchu...athukku mudal thadavai 2016 exam kum CV kuptanga...appovum kidaikala...So type mudichavangalukku lam velaya thookki thara mattanga therinchukonga.... Maximum JA va vida type mudichavangalukku 10 mark tha kammi agum..ok va..99 mark eduthavangalukku ellam type la job thara mattanga, even short hand kuda...99 mark KU entha community ah irunthalum job kidaikathu, CV kuda kupda mattanga, 6 months is enough to get type certificate both Tamil and English. Neengalum type certificate vangitu TNPSC exam eluthittu sollunga sir.

   Delete
  4. S correct sir same iam also completed type and short hand also no use this is a cheating

   Delete
  5. This is not cheating sir. There is no difference between type and JA. Everyone scores high marks.That's it. So we have to score high. This is the only way. So there is no cheating in it.

   Delete
 4. Good Decision. not affected for truthful candidates!!

  ReplyDelete
 5. It's very bad decision..if police go to investigation it will take minimum 2 to 3 years to release next list.if more no of candidate found to be fruad.they will cancel the exam after two years..

  ReplyDelete
 6. ****TNPSC Group4 தேர்வில் முறைகேட்டாளர்களை நீக்கிவிட்டு உண்மைத் தேர்வர்களுக்குப் பணி வழங்குவது போல.... TRB பாலிடெக்னிக் உண்மைத் தேர்வர்களுக்கும் பணி வழங்க அரசு வழிவகை செய்து, 1058 குடும்பத்தில் ஒளி ஏற்ற வேண்டுகிறோம்***

  ReplyDelete
 7. முறைகேட்டார்களை கண்டு பிடித்து எந்த ஒரு போட்டித்தேர்வுகளையும் எழுத முடியாத அளவுக்கு தடைவிதிக்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. அப்படி என்றால் பலருக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும்☺️☺️☺️

   Delete
  2. Super..... It's a good decision

   Delete
 8. அவங்க 35 பேர் மட்டும்தானா .... இன்னும் தெரியாதவர்கள் பலர்...காரணம் ????

  ReplyDelete
 9. 2017 TRB polytechnic cancel ஆனது
  உண்மையாக வெற்றி பெற்றவர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

  ReplyDelete
 10. எந்த தகுதியும் இல்லாமல் முறைகேடு செய்து அரசு வேலைக்கு செல்ல நினைக்கும் தேர்வர்கள் மற்றும் குற்றவாளி இல்லை பணம் கொடுத்தால் வேலை வாங்கி தருவதாக சொல்லும் இடைதரகர்கள் (அரசு ஊழியர்கள் உள்பட)என்ன தண்டனை தர போகிறது tnpsc நிர்வாகம்......தமிழகத்தில் இன்னும் எந்தெந்த மாவட்டத்தில் முறைகேடு நடந்தது என்று யாருக்கு தெரியும்.......... tnpsc நிர்வாகத்திற்கு முற்றுப்புள்ளி

  ReplyDelete
 11. சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட அனைத்து தேர்வர்களின் சொந்த மாவட்டம் மற்றும் தேர்வு எழுதிய மாவட்டம் என பிரித்து வெவ்வேறு மாவட்டத்தில் தேர்வு எழுதிய தேர்வர்கள் அனைவரிடமும் விசாரணை நடத்த வேண்டும்.

  ReplyDelete
 12. Job ku evloper vendumo athai 1:2 enkira muraila re exam vaithu edukkalame govt ku selavu kamiaagum den exam nermaya nadathanum yaarukkum paathippu varathu

  ReplyDelete
 13. Please check the selected candidates who all are coming from that particular district or two exam centre. They got high ranking so that we can find them otherwise we can't find them anyways.

  ReplyDelete
 14. Last grp 4 ல் விடிஞ்சா நான் Counsrling போகனும். ஆனால் முன்னாடி நாள் இரவு 9மணிக்கு Tnpsc. இருந்து குறுஞ்செய்தி வர வேண்டாம். Vacancy இல்லை என்று. 3 வருடமாக படித்து கொண்டு இருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. Sir, same enakku last time ithe nilamai than...

   Delete
 15. My fellow Indians please understand that group 4 exam is a human resource tragedy, and they test your memory only and at the end of the day you will be able to make 20000 per month only and you will become a good clerk ( nothing more than a remembering machine) you can't think of any new ideas which will help you to build a business and create a job for others fellow Indians and contribute to a Indian economy to grow, please do not make tragedy of writing the same exam by millions of people, pursue other options make India poverty free nation, jaihind

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி