TRB - கணினி ஆசிரியர் பணியிடங்கள்: சென்னையில் ஜன.8 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு தொடக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 5, 2020

TRB - கணினி ஆசிரியர் பணியிடங்கள்: சென்னையில் ஜன.8 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு தொடக்கம்


கணினி ஆசிரியர் பணியிடங் களுக்கு தேவையான கல்வித் தகுதிகள் சார்ந்து தேர்ச்சி பெறாதவர்கள், உரிய சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யாதவர்கள் என கண்டறியப்பட் டவர்கள் தவிர மீதம் உள்ளவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு ஜன. 8, 9,10 ஆகிய மூன்று நாள்கள் சென்னையில் நடைபெறவுள்ளன.

இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: ஆசிரி யர்தேர்வு வாரியம் சார்பில் கணினி பயிற்றுநர் நிலை1-க்கான (முதுநிலை ஆசிரியர்நிலை)கணினி வழியிலான தேர்வு கடந்த ஜூன் 23, ஜூன் 27 ஆகிய நாள்களில் நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கான மதிப்பெண் முடிவுகள் கடந்த நவ.25-ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

இதைத் தொடர்ந்து சான்றிதழ் சரி பார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ள தேர்வர்களின் தேர்வெண் விவரப் பட்டியல் நவ.28-இல் வெளி யானது. பின்னர் உரிய சான்றிதழ்களைப் பதிவேற்றம்செய்வதற்குடிச.2-ஆம் தேதி முதல் டிச.5-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.இதையடுத்து, கல்வித் தகுதிகள் சார்ந்து தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் தேவையான கல்வித் தகுதி கள் சார்ந்து சான்றிதழ்களைப்பதிவேற்றம் செய் யாதவர்கள் என கண்டறியப்பட்டவர்கள் தவிர மீதம் உள்ளவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு ஜன.8, 9,10 ஆகிய மூன்று நாள்கள் சென்னையில் நடைபெறவுள்ளது.

உரிய சான்றிதழ் சரிபார்ப் புக்கான அழைப்புக் கடிதங்களை (www.trb.tn.nic.in) இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். குறுஞ்செய்தி வழியாகவும் தகவல் அனுப்பப்படும்.

14 comments:

  1. Yemaathi posting poduravangulum.yemathi posting vaanguna neenga rendu perume
    nallave iruka maatinga .ithu 8 varusama wait pannavanga anaivaroda saabam...

    ReplyDelete
  2. நியமன‌ம் எப்போது நடக்கும்.

    ReplyDelete
  3. Ipo cv ku koopta elarukum posting ah?

    ReplyDelete
  4. வெட்கக்கேடான விஷயம் என்னவென்றால்,
    தற்போது8,9,10சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டவர்களில் முக்கால் வாசி அல்ல முழுவதுமே கணினி துறையில் அடிப்படையில் பட்டம் பெறாதவர்கள் ஆவார்கள்...
    இவர்களின் தகுதியை வெறும் ஒரே ஒரு முறைகேடாக நடத்திய கணினி வழித்தேர்வின் மூலமாக நிருபித்து விட்டதாக ஏற்றுக்கொண்டு இவர்களுக்கு மீண்டும் சான்றிதழ் சரிபார்க்க அழைப்பு வேறு....
    மனசாட்சியை கொண்ட மனிதன் எவரேனும் இன்னும் ஒருவராவது அரசில் வாங்கும் சம்பளத்திற்கு வேளையில் இருக்கும் பட்சத்தில் அவர்களின் மனசாட்சி நடந்து கொண்டிருக்கும் முறைகேடுகள்,தில்லுமுல்லுக்கு சிறதேனும் மதைஉறுத்தினால் போதும்...

    ReplyDelete
  5. தகுதியற்றோர் பட்டியலை போய் பார்க்கவும்

    ReplyDelete
    Replies
    1. இவ்வளவு தகுதியற்றவர்கள் எப்படி தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டார்கள்??????
      அப்ப சான்றிதழ் சரிபார்க்கும் போதுதான் தேர்வுஎழுதவே தகுதிஇல்லாதவர்களை அனுமதிக்க விட்டுவிட்டு சான்றிதழ் சாரிபார்க்கும் தருணத்தில்போது கண்விழித்து பார்த்து தகுதி அற்றவர்களை தேர்வு எழுத அனுமதித்து யாரரைதிருப்திபடுத்த?????
      எப்படி அறிவுக்கண்திறந்து தற்போது நிராகரித்து உள்ளனர்????????

      Delete
  6. Corruption. Pls conduct reexam

    ReplyDelete
    Replies
    1. No no neega again padichu tu vanga trb best neggala fail agitinga so ippudi pesuringa ..enga mathiri pass pannivangla ninAchu parunga

      Delete
  7. Ithil etthunai per part hu, discussion Lanni eluthi pass seithavarkal. Evarkalil etthunaiper thakuthiyanavarkal?

    ReplyDelete
  8. இதற்கு ஒரே தீர்வு..
    தேர்ச்சி பெற்ற அனைவரது கல்வித்தகுதிகள் மற்றும் தகுதித்தேர்வுகளின் விடைத்தாள்களின் நகல்களை வெளிப்படையாக வெளிப்படைத்தன்மையோடு இணையதளங்களில் அனைவரின் பார்வைக்கும் பொதைவாக வெளியிடலாமே....
    இதிலிருந்து அனைத்து வகையான மக்களின் மனக்குழப்பம் தீரும் அல்லவா???????????????°?

    ReplyDelete
  9. Reexam kondu vaanga pls..enga lifela vilayaadathinga..panamnu paathu ivalavum pannaa ithula kidaikura pAnatha anubavika unga sanyhathi irukathu...

    ReplyDelete
    Replies
    1. Ippudiya peasitu irrukama ippa irrudhu padika start pannuga boss...naga muna porom neega pinnadi vanga pa yaravdhu munnai poga vidunga

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி