சிறப்பாசிரியர் தேர்வில் தேர்வானவர்களுக்கு பணி நியமனம் வழங்ககோரி நாளை TRB அலுவலகத்தில் கோரிக்கை மனு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 5, 2020

சிறப்பாசிரியர் தேர்வில் தேர்வானவர்களுக்கு பணி நியமனம் வழங்ககோரி நாளை TRB அலுவலகத்தில் கோரிக்கை மனு!


ஆசிரியர் தேர்வுவாரியம் மூலம் 23.09.2017 அன்று நடைபெற்ற சிறப்பாசிரியர் (உடற்கல்வி, தையல், இசை, ஓவியம்) போட்டித்தேர்வை எழுதி அதன்மூலம் 532 உடற்கல்வி ஆசிரியர்கள் TRB வெளியிட்டுள்ள இறுதிபட்டியளில் இடம்பெற்றுள்ளோம். தேர்வு எழுதி இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகவும், சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து 16 மாதங்கள் கடந்தும் இன்னும் எங்களுக்கான கலந்தாய்வு மற்றும் பணிநியமனம் என்பது எங்களின் வெறும் கனவாகவே உள்ளது.. ஆகவே உடற்கல்வி துறையினருக்கான கலந்தாய்வு உடனே நடத்தி விரைவில் பணிநியமனம் செய்திட வேண்டும் என்ற நீண்டநாள் (இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக) வலியுறுத்தி தேர்வு செய்யப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றுள்ள உடற்கல்வி ஆசிரியர்கள் 06.01.2020 அன்று (திங்கள்கிழமை) காலை 11.00 am  முதல் TRB ல் மீண்டும் ஒன்றிணைந்து எங்களது கோரிக்கையை மீண்டும் வலுவாக வலியுறுத்த உள்ளோம். கடந்த காலங்களில் ஆதரவு தந்த தாங்கள் இந்த முறையும் ஆதரவு தந்து எங்களது கோரிக்கை வெற்றி பெற உதவிட வேண்டி கேட்டுக்கொள்கின்றோம்.

Request Letter to CM - Download here...

தொடர்புக்கு...

சேகர் (கடலூர்)
99769 86432
சரவணன் (நாகபட்டினம்)
99769 13130
ரா.தங்கேஸ்வரன் (விருதுநகர்)
99430 92312
திவ்யா (விழுப்புரம்)
82209 62996

6 comments:

 1. KSJ Academy
  English study materials available for TRB Polytechnic.
  Unit wise materials
  Comprehensive notes
  Poem texts.....
  Contact:
  9842230685
  9944488077

  ReplyDelete
 2. தற்காலிக பட்டியலில் உள்ளவர்களா???
  வழக்கு முடியவில்லையே எப்படி சாத்தியம்
  சென்னை நீதிமன்றம்???

  ReplyDelete
 3. seniorityla posting pottirunthalum 2018 varaiyavathu posting kidaithirukkum eppadi kaalula vizhunthu posting podunga ayya samynu sonnalum nadakathu ethu udarkalvi aasiriyarkalukkana saba kedu.....

  ReplyDelete
 4. உடற்கல்விக்கு முக்கியத்துவத்தை கொடுக்காததாலே தமிழ்நாடு சர்க்கரை நோயில் முன்னனி வகிக்கும் மாநிலமாக உள்ளது. ஆளும் வர்க்கத்திற்கு இதைப்பற்றி எல்லாம் கவலை இல்லை.

  ReplyDelete
 5. நண்பர்களின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி