TRB - இடைநிலை , பட்டதாரி , முதுநிலை ஆகிய ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு நடைபெறும் கால அட்டவணை வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 23, 2020

TRB - இடைநிலை , பட்டதாரி , முதுநிலை ஆகிய ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு நடைபெறும் கால அட்டவணை வெளியீடு.

*.டெட் தேர்வு மற்றும் ஆசிரியர் காலிப் பணியிட விவரங்களை உள்ளடக்கிய வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையை டிஆர்பி வெளி யிட்டுள்ளது.

*.தமிழக கல்வித் துறையில் ஏற் படும் காலி பணியிடங்கள், ஆசிரி யர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் போட்டித் தேர்வு நடத்தப்பட்டு நிரப்பப்படுகின்றன. இதற்காக ஆண்டுதோறும் டிஆர்பி சார்பில் வருடாந்திர தேர்வுக்கால அட்ட வணை வெளியிடப்படும்.

*.ஆனால், நீதிமன்ற வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த ஆண்டு தேர்வுக்கால அட்டவணை வெளியாகவில்லை.

*.இதனால் அதிருப்தியான பட்டதாரிகள் நடப்பு ஆண்டு கால அட்டவணையை வெளியிட கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில்2020-21-ம் கல்வி ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (ww.trb.in.nic.in) நேற்று வெளி யானது.

*.அதில் பல்வேறு பதவி களுக்கான தேர்வு அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

*.அதன்படி 97 வட்டாரக் கல்வி அதிகாரி பதவிக்கான தேர்வுபிப். 15, 16-ம் தேதிகளிலும், 2017-ல் முறைகேடு காரணமாக ரத்து செய்யப்பட்ட 1,060 பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு மே 2, 3-ல் நடைபெறவுள்ளது.

*.இதுதவிர ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) ஜூன் 27, 28-ம் தேதி களில் நடைபெறும். இதற்கான அறிவிப்பு மே 4-ல் வெளியிடப் படும்.

*.இதேபோல், 497 முதுநிலை ஆசிரியர், 730 பட்டதாரி ஆசிரியர் மற்றும் 572 இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பு ஜூலை மாதத்தில் வெளியாகும்.

10 comments:

 1. போட்டித் தேர்வுகள் மட்டும் தான் நடைபெறும் போஸ்டிங் போட மாட்டார்கள். இதுதான் இன்றைய தமிழகத்தின் நிலைமை.

  ReplyDelete
 2. இதெல்லாம் அரசின் சப்பகட்டு.. உபரியாக ஆயிரக்கணக்கில் இருக்கும் போது காலிப்பணியிடம் என்பது அரசின் ஏமாற்று வேலை..இதை நம்பி தங்களின் பொன்னான நேரத்தையும்,மற்ற வாய்ப்பையும் பறி கொடுக்க வேண்டாம் என்பது எனது உள்ளார்ந்த கருத்து

  ReplyDelete
  Replies
  1. Neenga padikadhiga demotivate pannadhinga

   Delete
  2. நான் யாரையும் படிக்க வேண்டாம் என கூறவில்லை.ஆசிரியர் பணி ஒன்றை மட்டுமே நோக்கமாக கொள்ளாமல் மற்ற துறைக்கான(TNPSC) போட்டித்தேர்விர்க்கு ஆயத்தமாவதே சாலசிறந்தது.ஏனெனில் ஆசிரியர் பணி வரும்காலங்களில் குதிரையின் கொம்பு.காலத்திற்கேற்ப மாற்றம் Update தேவை.

   Delete
 3. Admission for POLY TRB / ENGLISH - Contact 9497976999
  www.akshiraa.com
  Comprehensive Materials,
  Extra Notes,
  Shortcut Methods, Online Tests are available

  ReplyDelete
  Replies
  1. Sir and madam, I have need Trb Polytechnic materials in English Subject only,i have no attend class,working now.so please only materials give to me sir.how much amount in Trb Polytechnic materials in English unit-1 to unit-10 sir and madam.

   Delete
 4. Sir naan 2013 la Tet pass pannen but pass certificate download pannala. Ippa vaanga mudiuma? Naan ug trb apply panna mudiuma?

  ReplyDelete
 5. Ceo office ah condect panunga kandipa vangalam

  ReplyDelete
 6. Correcta follow pannuvangala sir

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி