ஆசிரியர் தேர்வில் இட ஒதுக்கீடு விதிமீறலை எதிர்த்து TRB மேல்முறையீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 31, 2020

ஆசிரியர் தேர்வில் இட ஒதுக்கீடு விதிமீறலை எதிர்த்து TRB மேல்முறையீடு


முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் இடஒதுக்கீடு விதிகள் மீறப்பட்டிருப்பதை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ள நிலையில் , அதை எதிர்த்து தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் மேல்முறையீடு செய்வதற்கு பாமக நிறுவ னர் டாக்டர் ச . ராமதாஸ் கண்டனம் தெரி வித்துள்ளார் . | இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை அரசுப் பள்ளிகளுக்கு 2 , 144 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்வு செய்வ தற்காக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட போட்டித் தேர்வுகளுக் கான முடிவுகள் இரு கட்டங்களாக வெளி யிடப்பட்டன .

முதல்கட்டமாக வெளியிடப்பட்ட முடிவுகளில் வேதியியல்பாட ஆசிரியர்கள் தேர்வில் இடஒதுக்கீட்டு முறை சரியாகக் கடைப்பிடிக்கப்படவில்லை என்றும் , அப் பட்டியலை ரத்து செய்துவிட்டு , இடஒதுக் கீட்டு விதிகளுக்கு உட்பட்டு புதிய பட்டி யலை தயாரித்து வெளியிடும்படியும் பாமக வலியுறுத்தியிருந்தது . அதைத்தொடர்ந்து இரண்டாம் கட்ட முடிவுகளில் தமிழ் , வர லாறு , பொருளாதாரம் ஆகிய பாடங்களுக் கானதேர்வு முடிவுகளிலும் அதேபோன்று இட ஒதுக்கீட்டு விதிகள் மீறப்பட்டிருந் ததை பாமக அம்பலப்படுத்தியது . இதனிடையே வேதியியல் பாட ஆசி ரியர் தேர்வில் , பொதுப்பிரிவில் வெற்றி பெற்ற மிகவும் பிற்படுத் தப்பட்ட மாணவர்க ளைப் பொதுப்பிரிவில் சேர்க்காமல் , இடஒதுக் கீட்டுப் பிரிவில் சேர்த் ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக் குகள் தொடரப்பட்டன .

அந்த வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங் கடேசன் , ஆசிரியர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீட்டு விதிகளையே தேர்வு வாரியம் புரிந்து கொள்ளவில்லை என்று கருத்து தெரிவித்தது மட்டுமின்றி , வேதியியல் பாட ஆசிரியர் தேர்வுப்பட்டியலை ரத்து செய்து விட்டு , இட ஒதுக்கீட்டு விதிகளை முழுமை யாக கடைப்பிடித்து புதிய தேர்வுப் பட்டி யலை அடுத்த இரு வாரங்களுக்குள் தயா ரித்து வெளியிட வேண்டும் என்று ஆணை யிட்டார் .

சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்ட இரு வார அவகாசம் கடந்த 23 - ஆம் தேதி யுடன் முடிவடைந்து விட்டது . ஆனா லும் , ஆசிரியர் தேர்வு வாரியம் புதிய பட்டி யலை தயாரித்து வெளியிடவில்லை . அதற்கு மாறாக , உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதா கத் தெரிய வந்துள்ளது . இது சமூக நீதிக்கு எதிரானது என்று ராமதாஸ் கூறியுள்ளார் .

5 comments:

  1. Tamil medium. Kaana placement IL Tamil Natil illai naan pakathika Patten neeethi kitaikkuma

    ReplyDelete
  2. Tamilvazhi Ku neethi ventum Sujatha

    ReplyDelete
  3. Tamil vazhi Ku itam ventum Sujatha

    ReplyDelete
  4. Sethu pona trb, waste trb, onnukuma layakku illai, if we ask any think question they are blinking, I don't know whether they are working or sleeping

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி