பொதுத்தேர்வு எழுத உள்ள 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களின் விவரங்கள் வெளியீடு! - kalviseithi

Feb 18, 2020

பொதுத்தேர்வு எழுத உள்ள 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களின் விவரங்கள் வெளியீடு!தமிழக பள்ளிக் கல்வியில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 2-ல் தொடங்கி ஏப்ரல் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இதற்கான முன்னேற்பாடுகள் முடிந்த நிலையில் இறுதி கட்ட பணிகள் தற்போது நடைபெறுகின்றன. இந்நிலையில், பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் விவரங்கள் வெளியாகி உள்ளன.

 10ஆம் வகுப்பில் 9 லட்சத்து 44 ஆயிரத்து 569 பேரும், 11ஆம் வகுப்பில், 8 லட்சத்து 26ஆயிரத்து 82 மாணவர்களும், 12ஆம் வகுப்பில், 8 லட்சத்து 16ஆயிரத்து 358 பேரும் பொதுத்தேர்வு எழுத உள்ளனர். கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டில் கூடுதலாக 10ஆம் வகுப்பில் 23 ஆயிரத்து, 230 பேரும், ஆம் வகுப்பில் 39 ஆயிரத்து 164 பேரும் தேர்வு எழுதுகின்றனர். புதிய பாடத்திட்டத்தின் கீழ், இந்தாண்டு, 10,12 ம் வகுப்பு மாணவர்கள் முதல் முறையாக தேர்வு எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி