ஊதியமீட்பு போராட்ட ஆசிரியர்கள் மீதான 17 ஆ ஒழுங்கு நடவடிக்கைகள் இரத்து - CEO செயல்முறைகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 1, 2020

ஊதியமீட்பு போராட்ட ஆசிரியர்கள் மீதான 17 ஆ ஒழுங்கு நடவடிக்கைகள் இரத்து - CEO செயல்முறைகள்!


இடைநிலை ஆசிரியர் ஊதியமீட்பு அரசாணை எரிப்பு 17 ஆ ஒழுங்கு நடவடிக்கைகள் இரத்து...
மதிப்புமிகு. ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்..

மேற்காண் பொருள் தொடர்பில் பார்வை 1 - ல் காணும் செயல்முறைகளின் படி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக 26 . 11 . 2018 அன்று நடத்தப்பட்ட அரசாணை எரிப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட 121 ஆசிரியர்கள் மீது தமிழ்நாடு குடிமைப்பணி ( ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு ) விதிகளில் விதி 17 ( b ) ன் கீழ் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர்கள் வாயிலாக ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது . மேற்படி போராட்டத்தில் கலந்து கொண்டு கைது செய்யப்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் மீதான வழக்கு மேல்நடவடிக்கை கைவிடப்பட்டதாக பார்வை 4 - ன் படியும் , மேற்படி வழக்கு சார்பான முதல் தகவல் அறிக்கை இரத்து செய்யப்பட்டதாக பார்வை 5 - ன் படியும் தகவல் பெறப்பட்டுள்ளது . இத்தகவல் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் இதன் மூலம் தெரிவிக்கப்பட்டு தொடர் நடவடிக்கை மேற்கொள்ள ஆணையிடப்படுகிறது . இணைப்பு - பார்வை 4 , 5 - ன் நகல்கள்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி