2020 - 2021ம் ஆண்டின் தமிழக அரசு நிதிநிலை அறிக்கையில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யப்படுமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 8, 2020

2020 - 2021ம் ஆண்டின் தமிழக அரசு நிதிநிலை அறிக்கையில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யப்படுமா?


அறிக்கை
08.02.2020
~~~~~~~~

2020 - 2021ம் ஆண்டின் தமிழக அரசு  நிதிநிலை அறிக்கையில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் எதிர்கால வாழ்வாதார கோரிக்கையான புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்துவதற்கான அறிவிப்பு இடம்பெற செய்து

அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின்  நீண்டநாள் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்
~~~~~~~~~~
2003ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு பணியில் நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவந்து நடைமுறை படுத்தியது மத்திய அரசு

தமிழக அரசும் அதனை ஏற்று தமிழகத்திலும் 2003ம் ஆண்டு ஏப்ரல் மாத்த்திற்கு பணியில் பணியில் நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை கொண்டுவந்து நடைமுறை படுத்தியது, புதிய பங்களிப்பு ஓய்வூதியம் என்பது ஓய்விற்கு பிறகு அரசு ஊழியர்கள் மாத ஊதியத்தில் இருந்து 10% விழுக்காடு பிடித்தம் செய்து அதே தொகையை அரசு செலுத்தி அந்த தொகையை மட்டும் தான் ஓய்விற்கு பிறகு வழங்கிப்படுகிறது, பழைய ஓய்வூதிய திட்டத்தில் அப்படி இல்லை மாத ஊதியத்தில் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் பிடித்தம் செய்துக்கொள்ளலாம் அந்த தொகையில் நாம் அவ்வப்போது நமது தேவைக்கு முன் பணமாக பெற்றுக் கொள்ளலாம், ஓய்விற்கு பிறகு மாதாமாதம் குடும்ப ஓய்வூதியம், குறிப்பிட்ட விழுக்காடு ரொக்கமாகவும் வழங்கப்படுகிறது அதோடு  பணிக்கொடையும் வழங்கப்பட்டு வருகிறது

புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் 10% விழுக்காடு பிடித்தம் அதே தொகையை அரசு செலுத்தினாலும் இத்திட்டத்தில் ஓய்வு பெற்றவர்கள் ரூ.10 லட்சத்தை இதுவரை தாண்டவில்லை,  தவிர  வேறு எந்த பயனும் இல்லாமல் தான் ஓய்வு பெறுகின்றனர், இந்த தொகை அவர்களின் எஞ்சியிருக்கும் வாழ்க்கையை கழிக்க உதவியாக இல்லை, காரணம் தன் பிள்ளைகளுக்கு பங்கிடவும் பெற்ற கடனை திருப்பி செலுத்த  மட்டுமே சரியாகிவிடுகிறது , ஓய்விற்கு பிறகு அவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியே

ஓய்விற்கு பிறகு  பிடித்தம் செய்யும் தொகையில் குறைந்தது மாதம் ரூ 10 ஆயிரமாவது ஓய்வூதியமாக வழங்கினால்  அவர்கள் மனைவியுடனும் கணவருடனும்  பட்டினியின்றி யார் தயவுயின்றி எஞ்சிய காலத்தை கழிக்க பேருதவியாக இருக்கும், எங்கள்  எதிர்கால வாழ்வாதார கோரிக்கையான புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய  திட்டத்தை மீண்டும் நடைமுறை படுத்த 2003ம் ஆண்டு முதல் பல கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றோம், ஆனால் அரசு பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வருவதற்கான சாத்திய கூறுகளை ஆராய குழுவை அமைத்தது தவிர வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, இதன் காரணமாக பலமுறை கோரிக்கை ஆர்பாட்டம் என பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் ஏற்காத  சூழ்நிலையில் தான் சென்ற ஆண்டு ஜனவரியில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் தன் எதிர்கால வாழ்வாதார கோரிக்கையான புதிய பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறை படுத்த காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தினார்கள்

போராட்டம் அரசை எதிர்த்து அல்ல, வேலைநிறுத்த போராட்டத்தை நடத்தினாலாவது அரசு பேச்சு வார்த்தைக்கு அழைத்து எங்கள் நியாமான கோரிக்கயை ஏற்று நிறைவேற்றாத  என்ற எண்ணத்தில் தான்  போராட்டம் நடத்தினோம், மாறாக அவர்கள் மீது வழக்கு தொடர்ந்து கைது செய்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து பணியிடை நீக்கம் செய்தும் பணியிட மாற்றம் செய்தும் அரசு உத்தரவிட்டது,அரசு  பணியிடை நீக்கம் செயதவர்களை மீண்டும் பணியில் சேர்த்து கொண்டது, ஆனால் அவர்கள் மீதுள்ள வழக்குகள் மற்றும் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைகளை இதுவரையில் திரும்ப பெற வில்லை

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு துணை முதலமைச்சர் மற்று நிதி அமைச்சர் அவர்கள் எங்கள் நியாயமான எதிர்கால வாழ்வாதார  கோரிக்கையான புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்துவற்கான அறிவிப்பை 2020 - 2021 தமிழக அரசு நிதிநிலை அறிக்கையில் இடம்பெற செய்து, அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் நீண்டநாள்  எதிர்கால வாழ்வாதார கோரிக்கையை நிறைவேற்றவும்

மற்றும் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்தும் மற்றும் அவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை திரும்ப பெற்று உதவிட தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்
~~~~~~~
சா.அருணன்
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு
9445454045
~~~~~~~~~

8 comments:

  1. சரி தான்.... ஆனால் ஒவ்வொரு முறையும் அதிமுக ஆட்சியில் மட்டுமே போராடுவது ஏன்??? 2006 -2011 வரை திமுக ஆட்சியில் ஏன் இந்த கோரிக்கைக்காக தொடர் வேலை நிறுத்தம் செய்யவில்லை..??

    நீங்கள் பணிபுரியும் பள்ளிகளில் கழிவறைகள், குடிநீர் வசதிகள் ,வகுப்பறை வசதிகள் எப்படி உள்ளது?? அதற்காக நீங்கள் செய்த பங்களிப்பு என்ன? குறைந்தபட்சம் அதற்காக அரசு வழங்கும் நிதி ஆதாராங்களை போலி ரசீது வைக்காமல் முழுமையாக செலவு செய்கிறீர்களா? மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள்...இதுபோல இன்னும் ஆயிரம் வினாக்கள் உண்டு....
    முதலில் நீங்கள் மாணவர்களிடம் கருணையோடு மனசாட்சியோடு நடந்துகொள்ளுங்கள்.... உங்கள் அரசியலை தூர விட்டுவிட்டு பாடத்தை ஒழுங்காக நடத்துங்கள்... அரசும் தானாகவே உங்களுக்கு கருணை காட்டும்.... உங்களை விட திறமையான, மாணவர்களோடு கரம் கோர்த்து அர்ப்பணிப்போடு பணிபுரிய தகுதியான சகோதர சகோதரிகளின் சாபம் உங்களை சும்மா விடாது

    ReplyDelete
    Replies
    1. Mr Jay unga comments la semma ya iruku Naga poliya bill vaikaradha kanakunkekaradhuku munadi government kita ipadi kelugaley central government kita vagara found la schools ku matudha kudukarigalanu ye Naga korika vachadha government schools nelama government ku theriyuma ye government ku theriyadha government schools nelama yepadi irukunu summa cinema parthutu vandhu indha dialogue la pesadhiga inga yarum teachers poliya kanaku vachirukaga tax katama yematharaga nu matikaradhila puriyudha avaga avaga kai kasu potula selavu panitu irukaga theriyama pesadhiga puriyudha nega soilara madhiri toilet illa katanum oru 50000 agum kuduga nu keta 10000 kudutha toilet katira mudiyuma soiluga.modhala government school pathi therijikitu pesuga ye government kita Naga matudha sambalam vagaromo teachers na avlo kevalama pochila.naga yega kadamaiya sariyadha seiyarom yela yedathulayum keta per intrest illama work pandra workers irukaga avagala la yelarukum keta per adhu poladha goverment schools layum ye Naga matudha poradanu. Illa unga area government school development kaga negalum poradalamey thapillaye.

      Delete
    2. Idhala sila mistakes iruku because of mobile dictionary na soila vandha visayam ungaluku therija podhu idhuku advice pana oru group varum

      Delete
    3. Jay vela kidaikaatha vayitherichala .....Puthusa velaikku varavan pension kekkamaatana....

      Delete
    4. சபாஷ் மிஸ்டர் unknown சார்....
      அரசுப் பள்ளிகளைப் பற்றி தெரியாமல் பேசவில்லை நண்பரே... முதலில் நீங்கள் உங்கள் தலைமை ஆசிரியரிடம் கீழ்கண்ட கேள்விகளை கேளுங்கள்...
      1. பள்ளி மானியம், பராமரிப்பு மானியம் என்னாச்சு னு கேளுங்கள்.. முடிந்தால் கேஷ்புக் மற்றும் வவுச்சர் புக் காட்ட சொல்லுங்கள்.. அதில் எழுதப்பட்டுள்ள செலவினங்கள் உங்கள் பள்ளியில் நடைபெற்றுள்ளதா என்று பாருங்கள்??? உங்களுக்கே சிரிப்பு வரும்...

      2. RMSA, SSA (சமக்ர சிக் ஷா) PTA நிதி ஆதாரங்கள் என்னாச்சுனு கேளுங்கள்??
      3. அரசு வழங்கிய நூலகப் புத்தகங்கள், ஆய்வகப் பொருட்களை முழுமையாக ஏன் பயன்படுத்தாமல் வீணாகி எடைக்கு போடுகிறீர்கள் என்று கேளுங்கள்???
      4. தேர்வுப்பணி, தேர்தல் பணி, விடைத்தாள் திருத்தம் என அனைத்திலும் விலக்கு கேட்கும் ஆசிரியர்களை ஏன் என்று கேளுங்கள்???

      நண்பரே... கோபம் வேண்டாம்... பல அரசு பள்ளிகளில் கழிவறைகள் சுத்தம் என்பது வெறும் ரசீதுகளில் தான் உள்ளதாம்....

      (குறிப்பு : எனக்கு வேலை கிடைக்காத வயித்தெரிச்சல் லாம் இல்ல தலைவா.... ஏன் தெரியுமா???? நீ தான் நான்...

      இனியாவது பள்ளி வளர்ச்சிக்கும், பணியிட ரத்தை எதிர்த்தும் சங்கங்கள் குரல் கொடுக்க வேண்டும்..... சங்கங்கள் அரசியல் கட்சிகளாக மாறாமல் இருந்தாலே போதும்....

      Delete
  2. நடக்கும் என்பார் நடக்காது. நடக்காது என்பார் நடந்துவிடும்.

    ReplyDelete
  3. ஆசிரியர் பணியிடங்கள் அழித்து ஒழிக்கப் படுகின்றன அதை பற்றிய எந்த கோரிக்கை, ஆர்பாட்டம் எதுவும்
    செய்வதே இல்லை,
    நீங்கள் உங்களுக்கு பணம் சார்ந்த கோரிக்கை, ஆர்பாட்டம் ஆகியவற்றை மட்டுமே
    செய்வது எந்த வகையில் நியாயம்??
    அரசு பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன... அதற்கான எந்த
    போராட்ட முன்னெடுப்பு ஒன்றும் இல்லையே...
    இப்போ இருக்கிற pension திட்டமே
    நல்லது தானே
    அதையும் ரத்து செய்து விட்டு
    ...எல்லோரையும் நடுரோட்டில் விட முயற்சியா???

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி