தேர்தல் பணி செய்த அலுவலர்களுக்கு, மதிப்பூதியம் வழங்க, 48.94 கோடி ரூபாய் ஒதுக்கீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 1, 2020

தேர்தல் பணி செய்த அலுவலர்களுக்கு, மதிப்பூதியம் வழங்க, 48.94 கோடி ரூபாய் ஒதுக்கீடு.


தமிழ்நாடு ஊரக உள்ளாட்சி தேர்தலில், தேர்தல் பணி செய்த அலுவலர்களுக்கு, மதிப்பூதியம் வழங்க, 48.94 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், 27 மாவட்டங்களில் மட்டும், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

தேர்தல் பணி செய்வர்களுக்கு, மதிப்பூதியம் வழங்க, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.மாவட்ட தேர்தல் அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மண்டல அலுவலர்கள், பார்வையாளர்கள், மாநகராட்சி கமிஷனர்கள், தாசில்தார்கள் போன்றோருக்கு, ஒரு மாத அடிப்படை சம்பளம்,அதிகபட்சமாக, 33 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது.பறககும் படை, வீடியோ கண்காணிப்பு படை, தேர்தல் நடத்தை விதிகள் கண்காணிப்பு குழு, உதவி செலவினப் பார்வையாளர், நிலைக் குழு ஆகியவற்றில் பணி செய்தவர்களுக்கு, ஒரு மாத அடிப்படை சம்பளம், அதிகபட்சம், 24 ஆயிரத்து, 500 ரூபாய்.கலெக்டர்களின் நேர்முக உதவியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராமஉதவியாளர்கள் போன்றோருக்கு, ஒரு மாத அடிப்படை சம்பளத்தில், 50 சதவீதம், அதிகபட்சம், 17 ஆயிரம் ரூபாய்வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.பிரிவு எழுத்தர்களுக்கு, 5,000 ரூபாய்; வாக்காளர் அட்டை செயல்பாட்டாளர்கள், தேர்தல் தகவல் செயல்பாட்டாளர்கள் ஆகியோருக்கு, 7,000 ரூபாய் வழங்க உத்தரவடப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவருக்கும், மதிப்பூதியம் வழங்குவதற்காக, 48.94 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர்கள், நிதியை பெற்று, தேர்தல் பணி செய்தவர்களுக்கு வழங்க வேண்டும் என, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

1 comment:

  1. Erkanave sambalam vanguranga ilaya... Apo ethuku second time... Election duty pakura apo regular job pannave ilaye... Indha mathiri extra salary kudukama olunga neraya peruku velai kudukalam

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி