5, 8-ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்து புதிய அரசாணை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 18, 2020

5, 8-ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்து புதிய அரசாணை


தமிழகத்தில் 5 மற்றும் 8-ம் வகுப்பு களுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்து புதிய அரசாணையை தமிழக அரசுபிறப்பித்துள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்த குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமை திருத்த சட்டத்தில், நாடு முழு வதும் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக அறிவிக் கப்பட்டிருந்தது.

இந்தச் சட்டத்தை பின்பற்றி, தமிழக அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் 13-ம் தேதி அரசாணை ஒன்றை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளில் பயிலும் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டது.

இதற்கு, தனியார் பள்ளி உரிமையாளர்கள், கல்வியாளர் கள்,பல்வேறு அரசியல் கட்சி களின் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, அடுத்து வரும் 3 ஆண்டுகளுக்கு5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்கள் கணக்கில் கொள் ளப்படாது.

தேர்ச்சி நிறுத்தி வைக் கப்படாது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித் தார். இருப்பினும், எதிர்ப்புக் குரல் தொடர்ந்து எழுந்தது. இதற் கிடையே தேர்வு நடத்துவதற்கு பள்ளிக் கல்வித் துறையும் தயாராகி வந்தது.

இந்நிலையில், கடந்த பிப்.4-ம் தேதி முதல்வர் பழனிசாமி தலை மையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை பரி சீலித்து, 5 மற்றும் 8-ம் வகுப்பு களுக்கு அறிவிக்கப்பட்ட பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது என்றார்.

அமைச்சரின் இந்த அறிவிப் புக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில், பள்ளிக் கல்வித் துறை செயலர் தீரஜ் குமார் அரசாணை வெளியிட்டுள்ளார்.அந்த அரசாணையில், ‘2019 - 20-ம் கல்வி ஆண்டில் இருந்து 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி ஆண்டின் இறுதியில் பொதுத்தேர்வு நடத்த கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் 13-ம் தேதி வெளியிட்ட அரசாணையை ரத்து செய்து அரசு ஆணை யிடுகிறது.

மேலும், ஏற்கெனவே உள்ள பழைய நடைமுறையே தொடரும்’ என்று தெரிவித்துள் ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி