சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள 972 பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப முடிவு!! - kalviseithi

Feb 24, 2020

சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள 972 பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப முடிவு!!


சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள 972 பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது . சென்னை மாநகராட்சியில் 10க்கு மேற்பட்ட துறைகளில் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட பணியாளர்கள் பணி புரிந்து வருகின்ற னர் . ஆணையர் , துணை ஆணையர் , வட்டார துணை ஆணையர் உள் ளிட்ட பதவிகள் தவிர்த்து மற்ற அனைத்து பதவிகளும் நேரடி நியமனம் மற்றும் பதவி உயர்வு மூலம் நிரப்பப்படும் .

இதன்படி கடந்த 2015ம் ஆண்டு உதவி பொறியாளர் , உதவி சட்ட அலுவலர் , உதவி மருத்துவ அலுவலர் , உதவியாளர் உள்ளிட்ட 805 பணியி டங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு மன்ற தீர்மானம் மூலம் அனுமதி பெறப்பட்டது . இதில் உதவி பொறியாளர் , சுகா தார ஆய்வாளர் என மொத் தம் 137 பணியிடங்களுக்கு மட்டும் ஆட்களை தேர்வு செய்ய அறிவிப்பாணை வெளியிடப்பட்டது .

இதன்படி விண்ணப் பங்கள் பெறப் பட்டு தேர்வு நடத்தப்பட்டது.  தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில் நிர்வாக காரணங்களுக் காக தேர்வு முடிவுகள் நிறுத்திவைக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்தது . தற்போது வரை இந்த முடிவுகள்
வெளியிடப்படவில்லை.

 இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக இந்த முடி வுகளை வெளியிடாமல் நிறுத்தி வைத்துள்ளன நிலையில் இந்த பணியிடங்களையும் சேர்த்து டி . என் பிஎஸ்சி மூலம் நிரப்ப சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளதாகதக வல் வெளியாகிவுள்ளது . நேரடி நியமன நிரப்ப அனுமதி பெறப்பட்ட 805
பணியிடங்களில் 62 மருத்துவ அலுவலர்களை மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நிரப்ப அனுமதி அளிக்ககோரி அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. TRB-POLYTECHNIC MATHS, ENGLISH, EEE, EC, and MECH
    FOR ADMISSION CONTACT ARUN ACADEMY ERODE. CELL -9944500245 (Material available)

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி