JEE தேர்வெழுத போறீங்களா? முழு விபரங்கள்!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 24, 2020

JEE தேர்வெழுத போறீங்களா? முழு விபரங்கள்!!


இந்தியா முழுக்க மத்திய அரசால் நடத்தப்படும் பொறியியல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களான என்ஐடிக்கள் , ஐஐடிக்களில் இளநிலை என்ஜினீயரிங் படிக்க விரும்பும் பிளஸ் டூ மாணவர்கள் , ஜே இ இ மெயின் நுழைவுத்தேர்வை எழுதவேண்டும்.

இந்த நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே , ஐஐடிக்காக தனிப்பட்ட முறையில் நடத்தப்படும் ஜேஇஇ அட்வான்ஸ்டு நுழைவுத் தேர்வை எழுதமுடியும் . இதனால் ஜே இஇ மெயின் தேர்வு கணிதம் , இயற்பியல் , வேதியியல் பாடங்களைப் படித்த பிளஸ் டூ மணவர்களுக்கு முக்கியமாக இருக்கிறது .

தற்போது ஜேஇஇ மெயின் நுழைவுத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது . கல்வித் தகுதி : 2018 , 2019 - ல் பிளஸ் டூ வகுப்பில் கணிதம் , இயற்பியல் , வேதியியல் ஆகியவற்றை முதன்மைப்பாடமாக எடுத்து , குறைந்த பட்சம் 75 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் தேர்வை எழுத தகுதியுடையவர்கள் ஆவர் .

இந்த ஆண்டு பிளஸ்டூ தேர்வு எழுதுபவர்களும் விண்ணப்பிக்கலாம் . ஜே இ இ மெயின் தேர்வு பிஇ , பிடெக் படிப்புகளுக்கு மட்டுமின்றி , பி . ஆர்க் , பி . டிசைன் படிப்புகளுக்கும் நடத்தப்படுகிறது . கம்ப்யூட்டரில் நடத்தப்படும் முதல் தாளில் கணிதம் , இயற்பியல் , வேதியியல் ஆகிய பாடங்களிலிருந்து அப்ஜெக்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும் . இத்தேர்வுக்கு விடையளிக்க மூன்று மணி நேரம் அளிக்கப்படும்.

சரியான விடைக்கு 4 மதிப்பெண்கள்
வழங்கப்படும் . ஒவ்வொரு  தவறான விடைக்கும் 1 மதிப்பெண் கழிக்கப்படும் . பி . ஆர்க் . , பி . பிளானிங் படிப்புகளில்  சேருவதற்கான மெயின் தேர்வு இரண்டாம் தாளின் முதல் பகுதியில் கணிதம் , ஆப்டிட்யூட் டெஸ்ட் ஆகிய பிரிவுகளுக்கான கேள்விகளுக்கு கம்ப்யூட்டர் மூலம் விடையளிக்க வேண்டியிருக்கும் . அதில் இரண்டாவது பகுதியான டிராயிங் டெஸ்ட் எழுத்துத் தேர்வுக்கு மூன்று மணி நேரம் வழங்கப்படும் . வினாத்தாள் ஆங்கிலம் , இந்தி மற்றும் குஜராத்தியில் இருக்கும்.

 விண்ணப்பிக்கும் முறை : தேர்வுக்கட்டணமானது ஒவ்வொரு தேர்வுக்கும் ஏற்ப மாறுபடுகிறது . குறைந்தபட்சம் 650 ரூபாயாகவும் , அதிகபட்சம் 1300 - ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 சென்னை , மதுரை , திருச்சி , புதுச்சேரி உள்பட நாட்டின் முக்கிய நகரங்களில் தேர்வு எழுதலாம் . ஏப்ரல் 5 , 7 , 8 , 9 , 11 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெறும் . தேர்வு முடிவுகள் ஏப்ரல் 30 - ஆம் தேதி வெளியிடப்படும் . ஆன்லைன் முறையிலும் கையால் எழுதும் முறையிலும் தேர்வு நடத்தப்படும்.

பாடத்திட்டங்கள் , தேர்வுக்கட்டண விவரங்கள் , மாதிரித் தேர்வு எழுதிப் பார்ப்பதற்கான வசதிகள் , மாதிரி வினாத்தாள்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன .

ஆன்லைனில் விண்ணப்பிக்கக்
கடைசி தேதி : 6 - 3 - 2020

விவரங்களுக்கு :

http://jeemain.nta.nic.in

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி