கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக தனியார் பள்ளிகளில் பணிபுரிவதற்கான ஆசிரியருக்கு சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் சனிக்கிழமை (01.02.2020)அன்று காலை 10 மணி முதல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்முகாம் ஆசிரியருக்காக மட்டும் சிறப்பு நிகழ்வாக நடைபெற உள்ளதால் ஆசிரியர் பயிற்சி பெற்ற பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள், உடற்கல்வி ஆசிரியர் என ஆண்,பெண் இருபாலரும் தங்களது கல்விச்சான்றுடன் கலந்துகொண்டு வேலைவாய்ப்பு பெறலாம். முகாமில் கலந்து கொள்ள வயது வரம்பு இல்லை, பல முன்னணி தனியார் பள்ளிகள் இம்முகாமில் கலந்து கொண்டு பல்வேறு ஆசிரியர் பணி காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இம்முகாமில் தேர்வு செய்யப்படும் தேர்வர்களுக்கு பணிநியமன ஆணை அப்போதே வழங்கப்படும். இம்முகாமில் பணிநியமனம பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.
இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் பள்ளிகள் மற்றும் வேலை நாடும் மனுதாரர்கள் www.ncs.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். முகாமில் கலந்துகொள்ள அனுமதி முற்றிலும் இலவசம்.
எனவே ஆசிரியர்கள் அதிகளவு கலந்துகொண்டு முகாமினை பயன்படுத்தி வேலைவாய்ப்பு பெற்று பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி