வருமான வரி சாதகங்களை ஒப்பிட இ - கால்குலேட்டர் மத்திய அரசு அறிமுகம் ( புதிய மற்றும் பழைய நடைமுறை ) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 7, 2020

வருமான வரி சாதகங்களை ஒப்பிட இ - கால்குலேட்டர் மத்திய அரசு அறிமுகம் ( புதிய மற்றும் பழைய நடைமுறை )

மத்திய அரசு சமீபத்திய பட்ஜெட்டில் வருமான வரி வரம்பில் மாற்றங்கள் கொண்டு வந்தது . மக்கள் புதிய வரி முறையை பின்பற்றலாம் அல்லது முந்தைய வரி முறையிலேயே தொடரலாம் என்று அறிவித்தது.

 இந்நிலையில் புதிய மற்றும் முந்தைய வரி முறையில் கிடைக்கக்கூடிய அனு கூலங்களை தெரிந்து கொள்ளும் வகையில் இ - கால்குலேட்டர் வசதியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது . அதன்படி , சம்பளதாரர்கள் அவர்களுக்கு பலனளிக்கக்கூடிய வரி முறைகளை இந்த இ - கால் குலேட்டர் மூலம் தெரிந்து கொள்ள லாம் . புதிய வரி வரம்பின்படி அவர்கள் செலுத்த வேண்டியவரித் தொகையையும் , முந்தைய வரி வரம்பின்படி அவர்கள் செலுத்த வேண்டிய வரித் தொகையையும் இ - கால்குலேட்டரில் ஒப்பீடு செய்து கொள்ளலாம் . வரி சலுகைகள் ரத்து புதிய வரி முறையை தேர்வு செய்பவர்கள் 80 - சி - யின் கீழ் வழங்கப்படும் வரிச் சலுகைகள் எதையும் பெற முடியாது .

இதனால் மக்களிடையே எந்த வரி முறையை தேர்வு செய்வது என்பது குறித்து குழப்பம் ஏற்பட்டுள்ளது . இந்நிலையில் அவர்களுக்கு எந்த வரி முறையில் அனுகூலம் என்பதை தெரிந்து கொள்வதற்கு இந்த இ - கால்குலேட்டர் வசதி அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது . www . incometaxindiaefiling . gov . in என்ற தளத்தில் இ - கால்குலேட்டர் வசதியை பயன்படுத்திக் கொள்ள லாம் .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி