பதவி உயர்வு மூலம் ஆசிரியர் காலிபணியிடத்தை நிரப்ப வலியுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 3, 2020

பதவி உயர்வு மூலம் ஆசிரியர் காலிபணியிடத்தை நிரப்ப வலியுறுத்தல்


''தொடக்க, நடுநிலை பள்ளியில் காலியாக உள்ள தலைமை, பட்டதாரி ஆசிரியர்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் ஏ.ஜோசப் சேவியர் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:தொடக்க, நடுநிலை பள்ளிகளில் ஒரே நிலையில்10 ஆண்டு பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை அந்தஸ்து வழங்கி, அடிப்படை சம்பளத்தில் இருந்து 6 சதவீத உயர்வும், தேர்வு நிலை முடித்து 10 ஆண்டுக்கு பின் சிறப்பு நிலை அந்தஸ்து வழங்கி, அடிப்படை சம்பளம் 6சதவீதம் உயர்த்தப்படும். இதற்கான உத்தரவை மாவட்ட கல்வி அலுவலர்கள் வழங்குவதால், காலதாமதம் ஏற்படுகிறது.

இதை தவிர்க்க வட்டார கல்வி அலுவலரிடம் இப்பணியை ஒப்படைக்க வேண்டும்.தமிழகத்தில் அரசு அனுமதி பெறுவது பற்றி முறையாக தெரியாமல், 4 ஆயிரத்து 500 ஆசிரியர்கள் உயர்கல்வி படித்துள்ளனர். கல்வித்துறை, உயர்கல்வி முடித்த ஆசிரியர்களுக்கு 17 ஏ - படி விளக்கம் கேட்டு, சம்பள உயர்வையும் நிறுத்தியுள்ளனர். இதை தளர்த்தி பின்னேற்பு வழங்கி, ஆசிரியர்களுக்கு தேர்வு எழுதிய நாளில் இருந்து சம்பள உயர்வு வழங்க வேண்டும்.தொடக்க, நடுநிலை பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, பணியிட மாறுதல் கவுன்சிலிங் முடிந்துள்ளது.

அதற்கு பின் ஓய்வு, இறப்பு மூலம் காலியாகும் பள்ளிகளில்தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். இக்கோரிக்கையை பள்ளிகல்வி துறை ஆணையாளர் சிஜூ தாமஸிடம் வலியுறுத்திள்ளோம், என்றார்.

3 comments:

  1. இடைநிலை ஆசிரியர் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்றால் கிடைப்பது 3% ஊதிய உயர்வு மட்டுமே ,தேர்வு நிலைக்கான பணிக்காலமும் ரத்தாகி 6% ஊதிய உயர்வும் கிடைக்காது.இப்படி பதவி உயர்வு தேவையா?

    ReplyDelete
  2. இடைநிலை ஆசிரியர் பட்டதாரி ஆசிரியராக/தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றால் கிடைப்பது 3% ஊதிய உயர்வு,ஆனால் பதவி உயர்வு பெறாமல் தேர்வு நிலை/சிறப்பு நிலை பெற்றால் 6% ஊதிய உயர்வு கிடைக்கும். எது சரி?

    ReplyDelete
  3. When will conduct pgtrb counselling

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி