அரசு பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் நாளை தமிழக அரசு அறிவிப்பு? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 13, 2020

அரசு பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் நாளை தமிழக அரசு அறிவிப்பு?


சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் மட்டும் அமல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டம் தமிழக நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது .

பள்ளி செல்லும் மாணவ மாணவிகளின் நலன் கருதி அரசு மற்றும் அரசு உதவிபெ றும் பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்தின் கீழ் மதிய உணவு வழங்கப்படுகிறது . தமிழகத்தில் தற்போது 43 ஆயிரம் பள்ளிக ளில் சத்துணவு வழங்கப்படுகி றது . இதன் மூலம் 49 . 85 லட்சம் மாணவ மாணவிகள் பயன் பெறுகின்றனர் . ஏழை மாண வர்கள் தொடர்ந்து படிக்க வேண்டும் என்பதற்காக மதிய உணவுத் திட்டத்தை காமரா ஜர் கொண்டு வந்தார் . எம் . ஜி . ஆர் . ஆட்சி காலத்தில் இது சத் துணவு திட்டமாக மாற்றப்பட் டது . கருணாநிதி முதல்வராக இருந்த போது சத்துணவுடன் முட்டை வழங்கப்பட்டது . அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவிகளின் எண் பக்கை குறைந்து வருகிறது . இதை தடுக்கவும் . மாணவர்க ளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரு கிறது . அதில் , மேலும் ஒரு நடவ டிக்கையாக அரசு பள்ளி மாண வ - மாணவிகளுக்கு காலை உணவு வழங்க திட்டமிடப் பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன .

இது குறித்து அதிகாரிகள் கூறியது சென்னை மாநகராட் சியில் உள்ள சுமார் 320 பள்ளிகளில் பயிலும் ஏறத்தாழ 85 ஆயி ரம் பள்ளி மாணவ , மாணவிக ளுக்கு காலை உணவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுவ ருகிறது . இந்தத் திட்டத்தில் இட்லி , தோசை , பொங்கல் , உப்புமா போன்ற உணவு வகை கள் காலை உணவாக தினமும் மாணவர்களுக்கு வழங்கப்படு கின்றன . சென்னையில் வெற்றி கரமாக நடைபெற்று வரும் இத் திட்டத்தை தமிழகம் முழுவ தும் விரிவுப்படுத்த அரசு திட்ட மிட்டுள்ளது . இந்தத்திட்டத்தை அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுப் டுத்த ஆண்டுக்கு ரூ . 8 ஆயிரம் கோடி செலவாகும் . பள்ளிக் கல்வித்துறை , சமூகநலத்துறை ஆகிய துறைகளுடன் ஆலோ சிக்கப்பட்டு விரிவான திட்ட அறிக்கை அரசிடம் சமர்ப்பிக் கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகி றது .

இதையடுத்து இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தமிழக சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்படவுள்ள நிதிநிலை அறிக் கையின் போது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றனர் . காலை உணவுத் திட்டத்தில் , தமிழகத்தின் பாரம்பரிய பச்சைப்பயிறு , கேழ்வரகு அடை குதிரைவாலி , சாமைக் கஞ்சி , கொண்டைக்கடலை போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உண வுகள் வழங்கப்படும் என்றும் , இதைத் தொடர்ந்து வரும் கல் வியாண்டிலிருந்தே காலை உணவுத் திட்டம் தமிழக அரசுப் பள்ளிகளில் செயலாக்கத்துக்கு வரும் என எதிர்பார்க்கப் படுகிறது . இதனால் 65 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர் .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி