ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம் வேண்டுகாள்!! - kalviseithi

Feb 15, 2020

ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம் வேண்டுகாள்!!


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சமீபத்தில் குரூப் - 4 மற்றும் குரூப் - 2ஏ தேர்வுகளில் நடந்த குளறுபடியால் புதிய புதிய மாற்றங்களை தற்போது செய்து வருகிறது . தவறுகளின்றி தேர்வுகளை நடத்துவதற்கு பல்வேறு வழிகள் உள்ளன . அவைகளை ஆராய்ந்து கண்டறிந்து முறையாக தேர்வுகளை நடத்துவதே சாலச்சிறந்தது !

ஆனால் குரூப் - 4 தேர்வில் ஏற்பட்ட குளறுபடியினால் புதிய மாற்றம் என்ற வகையில் மாணவர்களை வதைக்கும் வகையில் சில முடிவுகளை தற்போது TNPSC எடுத்து வருவதாக தெரிய வருகிறது . அதில் குரூப் - 4 தேர்வானாது முதல்நிலை , முதன்மை என இரண்டு நிலைகளில் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது .

குரூப் - 4 தேர்வானது 10 - ம் வகுப்பு கல்வித் தரத்தை மட்டுமே கொண்ட தேர்வாகும் . அரசுப்பணி கிடைக்காத காரணத்தினால் ஏராளமான இளைஞர்கள் உயர்கல்வி கற்றிருந்தாலும் , இந்தத் தேர்வினை எழுதுகிறார்கள் . ஆனால் 10 - ம் வகுப்பை அடிப்படை தகுதியாக கொண்டுள்ள தேர்விற்கு 2 நிலைத் தேர்வுகள் தேவையில்லை .

இம்முறை கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்னர் TNPSC பின்பற்றியது . அப்போது இருந்த அரசு , மாணவர்கள் நலன் கருதி 2 நிலைத் தேர்வுகளை நீக்கியது . தற்போது கொண்டு வந்துள்ள 2 நிலை தேர்வானாது மாணவர்களை தேர்வு எழுத தடுக்கும் நடவடிக்கையாகும் . ஒரு தேர்விலேயே கிராமப்புற மாணவர்கள் வெற்றி அடைய முடியாமல் இன்னும் தினறி வருகின்றனர் . 2 தேர்வுகள் என்பது சாமானிய மாணவனுக்கு
குரூப் - 4 பணியை எட்டாக்கனி
ஆக்குவது உறுதி !

அதேபோல் TNPSC விடைகளில் A , B , C , D , E என்ற 5 விடைகளை வழங்கும் முறைகளை புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது . இந்த முறையினால் எந்தப் பயனும் இருக்க வாய்ப்பில்லை | ஏற்கனவே இருந்த A , B , C , D முறைகளில் விடைத்தாளில் விடைகளை குறிக்காத தேர்வர்களின் விடைத்தாள்களை திருத்தாமல் தள்ளுபடி செய்தாலே போதுமானது.

தேர்வாணையத்தின் சீர்திருத்தங்கள் அனைத்தும் தேர்வு எழுதும் மாணவர்கள் மீதே திணிக்கப்படுகிறது . ஆனால் தேர்வாணையத்தில் எந்தவொரு சீர்திருத்தமும் செய்யப்படவில்லை . எந்தப் பாவமும் செய்யாத ஏழை - எளிய மாணவர்களின் தலைகளின் மீது சுமை சுமத்தப்படுகிறது . கிராமப்புற மாணவர்கள் அரசு வேலையை வெறும் கெளரவமாக பார்க்கவில்லை .

மாற்றப்பட வேண்டியது தேர்வாணையமும் , அதன் நடைமுறைகளும் தான் . புதிய முறை , புதிய சீர்திருத்தம் என்ற பெயரில் உண்மையிலேயே போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களை வதைக்காதீர் ! குளறுபடிகளின்றி தேர்வினை நிச்சயம் நடத்த முடியும் ! ! எனவே குரூப் - 4 மற்றும் குரூப் - 2ஏ தேர்வுகளை பழைய முறைப்படியே நடத்த பரிசீலனை செய்ய வேண்டுமென ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம் சார்பாக வேண்டுகிறோம் . நன்றி !

10 comments:

 1. யார் வேலைக்கு வரவேண்டும் யார் வரக்கூடாது என மத்தியரசு முடிவெடுத்ததை (Ias officer) மாநிலரசு தன்நிர்வாகத்தில் தலையிடுவதை தட்டிக் கேட்கமுடியவில்லை.ஒன்றுதிரளும் மாணவர்போராட்டமே இதைமமுரியடிக்கமுடியும்..
  Tnpse ரெய்டே இக்கட்டுப்பாடுகளைக் கொண்டுவரத்ன் எனநினைக்கிறேன். அடிமட்ட ஊழியரோடு விசாரணை முடிந்துவிடும்.

  ReplyDelete
 2. நடத்துங்கள் உங்கள் லீலைகளை

  ReplyDelete
 3. உண்மை தான் ஐயா.உங்கள் கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 4. உங்கள் கருத்து மிகவும் சரியானது ... ஆனால் என்ன செய்வது????
  கழுதைக்கு வாக்கப்பட்ட உதை வாங்கித்தான் ஆகவேண்டும்...

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி