பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்துக்கான செய்முறைத் தேர்வு தொடங்கியது! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 27, 2020

பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்துக்கான செய்முறைத் தேர்வு தொடங்கியது!


பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்துக்கான செய்முறைத் தேர்வு நேற்று தொடங்கியது. பள்ளியில் படிக்கும் மாணவர்களைத் தவிர தனித்தேர்வர்களும் இதில் பங்கேற்றனர்.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில்படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் என 9.5 லட்சம் மாணவர்கள் இந்த ஆண்டு பொதுத்தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 27-ம் தேதி தொடங்கிவரும் ஏப்ரல் 13-ம் தேதி நிறைவடைகிறது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான அறிவியல் பாட செய்முறைத்தேர்வு அவர்கள் தேர்வெழுதும் பள்ளிகளில் பிப்.26 முதல் 28-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்திருந்தது.

மேலும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், எந்தெந்த பள்ளிகளில் எப்போது செய்முறைத் தேர்வு நடத்துவது என்பதை முடிவெடுத்து அறிவித்துள்ளனர்.

அதன்படி, நேற்று 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் செய்முறைத் தேர்வு தொடங்கியது. மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் வந்து செய்முறைத் தேர்வில் பங்கேற்றனர். இதுதவிர, 10-ம் வகுப்பு தேர்வெழுதும் தனித்தேர்வர்களுக்கும் இதே நாட்களில் செய்முறைத் தேர்வு நடத்தப்படுகிறது. அவர்கள், தாங்கள் பயிற்சி பெற்ற பள்ளிகளிலேயே தேர்வெழுதலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி அவர்களும் நேற்று தொடங்கிய செய்முறைத் தேர்வில் பங்கேற்றனர். தொடர்ந்து இன்றும், நாளையும் செய்முறைத்தேர்வு நடைபெறுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி