பயிற்சி மையங்களை கண்காணிக்க முடிவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 27, 2020

பயிற்சி மையங்களை கண்காணிக்க முடிவு!


டி . என் . பி . எஸ் . சி . , தேர் வுக்கான பயிற்சி மையங் கள் , லஞ்ச ஒழிப்புத் துறை , வருமான வரித்துறை உள்ளிட்டவற்றின் கண் காணிப்பு வளையத்தில் வந்துள்ளதாக , தகவல்கள் வெளியாகியுள்ளன .

அரசு துறைகளில் காலி பணியிடங்களை நிரப்ப , டி . என் . பி . எஸ் . சி . , சார் பில் போட்டி தேர்வுகள் நடத்தப்படுகின்றன . இந்த தேர்வுகளை நேர்மையாக நடத்துவதற்கு , அனைத்து வகை நடவடிக்கைகளை யும் ,
டி . என் . பி . எஸ் . சி . , எடுத்து வந்தது.

ஆனால் , சமீபகாலமாக போட்டி தேர்வுகளில் , பல் வேறு முறைகேடு புகார் கள் எழுந்த வண்ணம் உள்ளன . குரூப் - 4 , குரூப் - 2 ஏ . குரூப் - 1 , வி . ஏ. ஓ உள்ளிட்ட தேர்வுகளில் , இடைத்தரகர்கள் மற்றும் சில ஊழியர்களின் ஆதிக்கம் காரணமாக , 50க்கும் மேற்பட்டவர்கள் , முறை கேடாக தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர் .

இது தொடர்பாக , சி . பி . சி . ஐ . டி . , போலீசார் வழக்கு பதிவு செய்து , 40க்கும் மேற்பட்டவர்களை கைது செய்துள்ளனர்.
 போலீசார் நடத்திய விசாரணையில் , சர்ச்சைக் குரிய போட்டி தேர்வு களில் , இடைத்தரகர்க ளுக்கு வினாத்தாள் கசிந்து , அவர்கள் வினாத்தாள் தயாரிப்பு பட்டியலில் உள்ள ஆசிரியரை வைத்து , விடைக்குறிப்பை தயார் செய்துள்ளது . மேலும் , விடைக்கு றிப்பு தயார் செய்ய , பயிற்சி மையத்தை சேர்ந்த சிலர் உடந்தையாக செயல்பட் டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது .

முறைகேடுக்கு துணை போன தேர்வர்கள் , சில பயிற்சிமையங்களின் பரித் துரைகளில் , இடைத்தரகர் களை அணுகியதும் தெரிய வந்துள்ளது . இந்நிலையில் , பயிற்சி மையங்களை கண்கா ணிப்பு வளையத்தில் கொண்டுவர , டி . என் . பி . எஸ் . சி . , நடவடிக்கை மேற்கொண்டுள்ளது . தமிழக லஞ்ச ஒழிப்பு துறை , வரு மான வரித்துறை , சி . பி .சி . ஐ . டி . , போலீசார் என , பல தரப்பிலும் ரகசிய கண்காணிப்பு துவங்கியுள்ளதாக கூறப் படுகிறது . டி . என் . பி . எஸ் . சி . , யின் வினாத்தாள்கள் , பயிற்சி மையங்களுக்கு கசிகிறதா என்பதை கண்காணிக்க வும் , தனிப்படை அமைக் கப்பட்டுள்ளது .

பயிற்சி மையங்களில் , தேர்வர்களுக்கு பயிற்சி வகுப்புகள் மட்டும் நடக்கிறதா ; குறிப்பிட்ட மாணவர்களை தேர்வு செய்து , அவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற சட்டவிரோத உதவி செய்யப்படுகிறதா என , அரசின் பல்வேறு துறை கள் கண்காணிப்பதாக , டி . என் . பி . எஸ் . சி . , வட்டா ரங்கள் தெரிவித்துள்ளன .

2 comments:

  1. TRB-POLYTECHNIC MATHS, ENGLISH, EEE, EC, and MECH
    FOR ADMISSION CONTACT ARUN ACADEMY ERODE. CELL -9944500245 (Material available)

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி