Breaking News...தொடக்கப்பள்ளிகளில் 50 விழுக்காடு தலைமை ஆசிரியர் பணியிடங்களை நேரடியாக அரசே நியமனம் செய்யலாம்!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 17, 2020

Breaking News...தொடக்கப்பள்ளிகளில் 50 விழுக்காடு தலைமை ஆசிரியர் பணியிடங்களை நேரடியாக அரசே நியமனம் செய்யலாம்!!


நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில், பணி மூப்பின் அடிப்படையில் தலைமை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள். இதனால் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லாத சூழல் நிலவுகிறது.

இதனை சரிசெய்யும் விதமாக 50 விழுக்காடு பள்ளிகளில் இனி தலைமை ஆசிரியர்களை நேரடியாக நியமனம் செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது நீண்ட காலமாக பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு எதிரானது என தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள தொடக்க மற்றும் இடைநிலை பள்ளிகளில் 20 லட்சம் பேர் படித்து வருகின்றனர். ஆனால் மொத்தம் 1.2 லட்சம் ஆசிரியர்களே உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் அதே ஊரைச் சேர்ந்தவர்களாக உள்ளதால் மாணவர்களின் மனநிலை, பெற்றோர் மற்றும் அந்த ஊரின் சூழல் குறித்த புரிதல் இருக்கும்.

அதனால் தேர்வு நடத்தி தலைமை ஆசிரியரை நியமிக்காமல் பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கும் நடைமுறையே தொடர வேண்டுமென கேரள அரசு வலியுறுத்தியுள்ளது. அதேசமயம் பஞ்சாப் மற்றும் பீகார் மாநிலங்கள் தேர்வு முறையில் தலைமை ஆசிரியர்களை நியமிக்கும் பணிகளை தொடங்கிவிட்டன.

6 comments:

  1. Pg trb economucs 2020-21.for guidance 7498714479

    ReplyDelete
    Replies
    1. உங்களைப் போன்ற எரியும் வீட்டில் பிடிங்கியமட்டும் லாபம் எனச் செயல்படும் சுயநலக்கார ஈனப்பிறவிகளால் தான் கல்வித் துறை மாசடைந்துள்ளது. இந்தத் தீர்ப்பு கல்விச்சூசூழலுக்கே ஆபத்தானது என உணரக்கூட முடியாத அறிவிலியே.

      Delete
  2. அப்பரம் என்ன பணத்த வாங்கி குமிங்க

    ReplyDelete
  3. Arasiyal viyadhigal kattil mazhai dhan hooooooo

    ReplyDelete
  4. பள்ளிக்கல்வி துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு, காரணம் அதிக தொகையை தனியார் பள்ளிகள் பெற்று, அவை25% மாணவர் சே்க்கைக்கான தொகையை லபக்கி கொள்ளவே, அரசு பள்ளிகள் மூடப்பட்டு, ஆசிரியர் பணியிடங்கள் கிட்டத்தடட 50% வரையில் அழித்தொழிக்க படுவதை, அனைவரும், வாய் இருந்தும் வூமைகளாய் ... ஆசிரியர் சங்கங்கள் கூட..எந்த எதிர்ப்பு போராட்டமும் செய்யவில்லை,
    50% HM பணியிடங்கள் இனிவரும் காலங்களில், நடுநிலை பள்ளி களில்
    வழங்கப்படும், முடிந்தால் தனியார் பள்ளிகலில் பணி புரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்...
    இப்படிப்பட்ட அறிவிப்பு களை எதிர் பாருங்கள்...
    நமது (ஆசிரியர்கள்)
    நல் பென்ஷன் கொடி, நெறய சம்பளம் கொடு,
    BECOZ... இந்த அரசு இரண்டாவது முறையாக வெற்றி பெற
    அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள்,
    ஆதரவாக இருந்தோம்,
    மூன்றாவது முறையாக வெற்றி பெற வேண்டும்...அதற்கும் பாடுபடுவோம்!!!

    ReplyDelete
  5. அப்படியே இந்த எம்எல்ஏ மற்றும் எம்பி பதவிகளையும் எழுத்து தேர்வு மூலம் மத்திய மற்றும் மாநில அரசுகள் தேர்வு வாரியம் தேர்ந்தெடுக்கவும்....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி