Creamy Layer க்கு உட்பட்டவர்களுக்கு OBC சான்று அளிப்பது தவிர்ப்பது மற்றும் அதில் விதிவிலக்கு விபரங்கள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 7, 2020

Creamy Layer க்கு உட்பட்டவர்களுக்கு OBC சான்று அளிப்பது தவிர்ப்பது மற்றும் அதில் விதிவிலக்கு விபரங்கள்!


OBC சான்று யாருக்காக விண்ணப்பிக்கப்படுகிறதோ அவர்களின் பெற்றோர் கீழ்க்கண்டவர்களில் ஒருவராயிருந்தால் அவர்கள் OBC சான்று பெற தகுதி அற்றவர்கள் ஆவர் .

1 . இந்திய அரசியலமைப்புப் பதவியில் உள்ளவர்கள் .
2 . பெற்றோரில் ஒருவர் ( அல் ) இருவரும் Class 1 / Group ' A ' அலுவலராக நேரடி நியமனம் மூலம் நியமிக்கப்பட்டிருந்தால் .
3 . பெற்றோரில் இருவரும் Class 1 / Group ' A ' அலுவலராக நேரடி நியமனம் மூலம் நியமிக்கப்பட்டும் , அதில் ஒருவர் இறந்துவிட்டிருந்தாலும் ( அல் ) நிரந்தர இயலாமையினால் பாதிக்கப்பட்டிருந்தாலும் .
4 . பெற்றோரில் ஒருவர் ( அல் ) இருவரும் Class 1 / Group ' A ' அலுவலராக நேரடி நியமனம் மூலம் நியமிக்கப்பட்டும் , அதில் ஒருவர் இறந்துவிட்டிருந்தாலும் ( அல் ) நிரந்தர இயலாமையினால் பாதிக்கப்படுவதற்கு முன்பு 5 வருடத்திற்கு மேல் UN , IMF , World Bank போன்ற பன்னாட்டு நிறுவனங்களில் பதவி வகித்திருந்தால் .
5 . பெற்றோரில் இருவரும் Class II / Group ' B ' அலுவலராக நேரடி நியமனம் மூலம் மத்திய , மாநில அரசுப் பணிகளில் நியமிக்கப்பட்டிருந்தால் ,
6 . பெற்றோரில் கணவர் மட்டும் Class II / Group ' B ' அலுவலராக நேரடி நியமனம் மூலம் நியமிக்கப்பட்டு நாற்பது வயதுக்குள் Class 1 / Group ' A ' அலுவலராக பதவி உயர்வு பெற்றிருந்தால் .
7 . பெற்றோரில் இருவரும் Class II | Group ' B ' அலுவலராக நேரடி நியமனம் மூலம் நியமிக்கப்பட்டும் , அதில் ஒருவர் இறந்துவிட்டிருந்தாலும் ( அல் ) நிரந்தர இயலாமையினால் பாதிக்கப்படுவதற்கு முன்பு 5 வருடத்திற்கு மேல் UN , IMF , World Bank போன்ற பன்னாட்டு நிறுவனங்களில் பதவி வகித்திருந்தால் .
8 . பெற்றோர்களின் வருட வருமானம் ₹ 8 லட்சத்திற்கு மேல் இருந்தால் . ( சம்பளம் மற்றும் விவசாயம் மூலம் ஈட்டப்படும் வருமானத்தை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியது இல்லை )
9 . மேற்கண்ட விதிகளுக்கு உட்படாத மற்றும் மத்திய , மாநில இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் சாதிகளைச் சார்ந்த அனைவரும் OBC சான்று பெற தகுதியானவர்கள் ஆவர் .

Download Full Details here...

1 comment:

  1. சம்பளம் கருதவேண்டியதில்லை என்றால் புரியவில்லை..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி