Flash News: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 27, 2020

Flash News: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு!!

திருச்சியில் இரண்டு கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்!

தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சித் தேர்தல் ஊரக உள்ளாட்சி, நகர்ப்புற உள்ளாட்சி என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன்படி கிராம ஊராட்சி, ஒன்றிய, மாவட்டக் கவுன்சிலர் பதவிகளுக்கான நேரடி ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த டிசம்பர் மாதம் 2 கட்டமாக நடைபெற்றது.

ஆனால், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளைக் கொண்ட நகர்ப்புற உள்ளாட்சிக்கானத் தேர்தல் தேதி இன்னும்அறிவிக்கப்படவில்லை.

 இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் திருச்சி மாநகராட்சி, துவாக்குடி, மணப்பாறை, துறையூர் ஆகிய 3 நகராட்சிகள், 16 பேரூராட்சிகளுக்கு 2 கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் என மொத்தம் 252 கவுன்சிலர் பதவிகளுக்கு நேரடித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான விரிவான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி