RTI - பிப்ரவரி மாத சம்பளப் பட்டியல் உடன் வருமானவரி கணக்கீடு படிவம் மற்றும் பிடித்தங்கள் செய்தற்குரிய சான்று இவற்றை கருவூலத்துக்கு செலுத்த வேண்டிய அவசியமில்லை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 13, 2020

RTI - பிப்ரவரி மாத சம்பளப் பட்டியல் உடன் வருமானவரி கணக்கீடு படிவம் மற்றும் பிடித்தங்கள் செய்தற்குரிய சான்று இவற்றை கருவூலத்துக்கு செலுத்த வேண்டிய அவசியமில்லை!

பிப்ரவரி மாத சம்பளப் பட்டியல் உடன் வருமானவரி கணக்கீடு படிவம் மற்றும்  பிடித்தங்கள் செய்தற்குரிய சான்று இவற்றை கருவூலத்துக்கு செலுத்த வேண்டிய அவசியமில்லை. பிடித்தம் செய்யப்பட்டது என்ற சான்று வைத்தாலே போதும் என்பதற்குரிய ஆர்டிஐ தகவல்.

எம் பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கு வருமான வரி கணக்கிட்டு பிப்ரவரி மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டது என சான்றிதழ் வைத்தால் போதும் .

* வருமானவரி கணக்கீட்டுத் தாள் மற்றும் பிடித்தம் செய்ததற்கான சான்றிதழ்கள் ஆகியவை Tax இருந்தால் 3 நகல்கள் , Tax இல்லாவிடில் 2 நகல்கள் எல்லாம் வைக்க வேண்டிய தேவையில்லை . அதில் குறை இதில் குறை என்று கருவூல அலுவலர்கள் குற்றம் கண்டறிவதும் பில் ஆடிட் போடுவது அதை சரிசெய்ய முயற்சிப்பது கவனிப்பது போன்றவற்றிற்கு இவ்வாண்டு முடிவுக்கு வந்துவிட்டது . தமிழ்நாடு நிதி விதி தொகுப்பு 86 ( a ) - ன்படி சம்மந்தப்பட்ட அலுவலர் மற்றும் பணம் பெற்று வழங்கும் அலுவலரே பொறுப்பாளர் .

* வருமான வரியைப் பொறுத்தவரை சென்ற ஆண்டு 80CCD ( IB ) ல் கூடுதலாக 50000 Cpsல் கழித்துக் கொள்ள தெளிவுரை பெற்றுத் தந்தது தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் TAMS , அதே போல் இவ்வாண்டு கருவூலத்திற்கு Tax form தேவையில்லை தலைமையாசிரியர் சான்று அளித்தாலே போதும் என்ற தெளிவுரை பெற்றுள்ளது.

என்றும் ஆசிரியர் நலனில் அக்கறையுடன்
Mr . உதுமான்
மாவட்ட செயலாளர்
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்
திருச்சி மாவட்டம்
9790328342

income tax form-no-need to submet treasury regards rti letter ( pdf )  - Download here...

4 comments:

 1. 80ccD(1B) இல் old பென்ஷன் திட்டத்தில் உள்ளவர்கள் கூடுதலாக
  Rs 50000 கழித்து கொள்ள லாமா?
  கூடாது என்றால் ஏன்?

  ReplyDelete
 2. நாங்கள் (செங்கம்) சென்ற ஆண்டே கருவூலத்தில் பேசி - பில் மட்டும்தான் அனுப்பினோம். வருமான வரி படிவம் BEO அலுவலகத்திலேயே இருந்தது. நமச்சிவாயம்.

  ReplyDelete
 3. கருவூலத்தில் பணிபுரிபவர்கள் ஊழியர்களின் ஒவ்வொருவருடைய வருமானவரி படிவத்தை சரிபார்க்கின்ற வேலை கிடையாது.IT பொறுப்பு பணம் பெற்று வழங்கும் அலுவலருடையது. மிக்க மகிழ்ச்சி.

  ReplyDelete
 4. *1914 தேர்வர்களுக்கு அழைப்பு*: 2017-ல் TRB அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் (1058 பதவிகளுக்கு) நேர்மையாக தேர்வெழுதி சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்ட 1914 விண்ணப்பதாரர்கள் (2110 - 196 tainted candidates) உயர் நீதிமன்றகளில் writ மனு செய்ய முன்வரவும். "தவறிழைத்த 196 பேரை ஏன் இதுவரை தடைசெய்யவில்லை", என்ற எனது உச்சநீதிமன்ற PIL மனுவில், கீழ்-நீதிமன்றங்களை நாட 'Liberty' கொடுக்கப்பட்டுள்ளது. 2017-ல் ஏமாற்றப்பட்ட நேர்மையான தேர்வர்களும், 2019-ல் எதிர்பார்ப்பில் தேர்வெழுத போகும் தேர்வர்களும், ஆசிரியர்கள் இன்றி தவிக்கும் பாலிடெக்னிக் மாணவர்களும் இதனால் பயன் அடைவார்கள். ஊழல், முறைகேடுகள் களையப்படும். நன்றி! __ K.M.கார்த்திக் (+917395868135), மனுதாரர்


  உங்கள் HAll Ticket-ஐ, Score card-ஐ காண்பித்து, உங்கள் அடையாளத்தை உறுதி படுத்தி, இந்த whatsapp குழுவில்இணையவும்.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி