TRB - 24 கடுமையான விதிமுறைகளை தேர்வர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் வகுத்துள்ளது. - kalviseithi

Feb 13, 2020

TRB - 24 கடுமையான விதிமுறைகளை தேர்வர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் வகுத்துள்ளது.


ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்படும் பணியாளர் தேர்வுக்கான விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டிருக்கின்றன. நாளை முதல் 16ம் தேதி வரை வட்டார கல்வி அலுவலர் பணிக்கான இணையவழி தேர்வு நடைபெறவுள்ளது.

இதற்காக 24 கடுமையான விதிமுறைகள் டி.ஆர்.பி. வகுத்துள்ளது. நாளை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தமிழகம் முழுவதும் காலியாக இருக்கக்கூடிய வட்டார கல்வி அலுவலர்களுக்கான கணினிவழி தேர்வு நடைபெறவிருக்கிறது. இதற்காக 57 தேர்வு மையங்கள் ஏற்கனவே தயார் செய்யப்பட்டிருக்கின்றன. குறிப்பாக இந்த ஆண்டு நடைபெற கூடிய இந்த தேர்வானது சமீபத்தில் நடந்து முடிந்திருக்கக்கூடிய டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகளையொட்டி கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. இதில் 24 கட்டுப்பாடுகள் தேர்வர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது.

*ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யக்கூடிய கடவு சீட்டை வைத்துக்கொண்டு தேர்வறைக்கு வரவேண்டும்.

* வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பான்கார்ட் ஆகியவற்றில் ஒன்றை கட்டாயம் எடுத்து வர வேண்டும்.

* ஹால் டிக்கெட்டில் உள்ள படத்துடன் தேர்வர் முகம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

* சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அதில் வைத்திருக்க வேண்டும்.

* தேர்வு மையத்திற்குள் நகை அணிந்து செல்ல தடை.

* தேர்வர்கள் வெளியிலிருந்து பேனா, பேப்பர் எடுத்து செல்ல தடை.

* மேஜிக் பேனா மோசடியை தடுக்க தேர்வறையிலேயே பேனா வழங்குகிறது டி.ஆர்.பி.

* வாட்ச், பெல்ட், ஷு, ஹீல்ஸ் செருப்பு அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல தேர்வர்களுக்கு இந்த முறை தேர்வு நடைபெறும் பகுதியானது புதிதாக ஒதுக்கப்படவிருக்கின்றது. தேர்வு நடைபெறுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாகத்தான் அவர்கள் எந்த பகுதியில் தேர்வு எழுத போகின்றனர் என்ற தகவல் அவர்களுக்கே கிடைக்கப்பெறும்.

குறிப்பாக இந்த முறை அவர்கள் தேர்வு செய்திருக்கக்கூடிய நகரங்களை தவிர்த்து மற்ற இடங்களில் அவர்களுக்கு தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றன. தூத்துகுடி, திருநெல்வேலி போன்ற பகுதிகளில் இருந்து அருகே உள்ள மாவட்டங்களளை தேர்வு செய்தவர்களுக்கு சென்னை, காஞ்சிபுரம்  போன்ற பகுதிகளும், அதேபோல கோயம்புத்தூரை சேர்ந்தவர்களுக்கு கரூர், திருச்சி போன்ற மாவட்டங்களையும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே நடந்து முடிந்திருக்கக்கூடிய இந்த டி.என்.பி.எஸ்.சி. முறைகேட்டில் முன்கூட்டியே திட்டமிட்ட அந்த தேர்வு அறை மிகப்பெரிய பிரச்சனையாக பார்க்கப்படுகின்றது. எனவே இந்த முறை டி.ஆர்.பி. நடத்தக்கூடிய இந்த தேர்வில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.

நீட் தேர்வில் மாணவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் போல பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி. முறைகேட்டில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதால் நடைபெறவிருக்கும் இந்த தேர்விலும் எந்த முறைகேடும் நடைபெறகூடாது என்று இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து எந்த காரணத்திற்கொண்டும் தேர்வு மையங்கள் மாற்றப்படாது என்று டி.ஆர்.பி. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

20 comments:

 1. முறைகேடை களைய
  தேர்வு எழுதுபவர்களை வதைத்தால் சரியாகிவிடுமா கர்பிணி ஆசிரியை ஒருவருக்கு Tvr to kanchipuram 350 km அதுவும் காலை 7.30க்கு உள்ளே இருக்க வேண்டும்.ஆசிரியை படிப்பதை நிறுத்திவிட்டார். Beo தேர்வு நன்றாக படித்துள்ளார். தொலை துரத்தை நினைத்து புலம்பியே அவருக்கு உடல்நிலை மோசமாகிவிட்டது.

  ReplyDelete
 2. Computer based exam ku ethuku magic pen use panna poranga.....
  Rough use ku magic pen use panni enna pandrathu....

  ReplyDelete
  Replies
  1. அதுதான் ஒன்னும் புரியல???

   Delete
 3. Padichu pass panravangalukku mattum intha rules porunthum.

  ReplyDelete
 4. நானும் படிப்பதை நிறுத்திவிட்டேன். நன்றிகள் பற்பல. தேர்வு எழுதினால் தானே இந்த பிரச்சனை., இனிமேல் தேர்வு எழுதவே வராதீர்கள்.

  ReplyDelete
 5. Nan virudhunagar enaku exam centre coimbatore

  ReplyDelete
 6. உங்க ஊழல் வெளிய வரட்டுன்டா அப்பறம் பாக்கலாம் உங்க யோக்கிதைய எல்லாம்.விரைவில்........

  ReplyDelete
 7. Neenga kollai adpinga......exam center 500km distance.....ithuku need 3000 rs ...yaru tharva....pongada neengalam

  ReplyDelete
 8. TNPSC ல தான் சொல்றாங்கனா நாங்களும் அதை நம்மனுமா.
  Exam Centre யார் தேர்ந்தெடுப்பது. TNPSC தான் Exam Centre ஒதுக்குவாங்க. நாம் தாலுக்காதான் தேர்ந்தெடுக்க முடியும்.
  Fraud பண்ணி தேர்வு எழுதியவர்களுக்கு ஒரே Exam Centre ஒதுக்கினது TNPSC தான். தேர்வர்கள் தேர்ந்தெடுக்கவில்லை.

  ReplyDelete
 9. ஒரு தாலுக்காவில் குறைந்தது 10 முதல் 15 தேர்வு மையங்கள் இருக்கும். முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் அனைவருக்கும் ஒரே தேர்வு மையத்தை ஒதுக்கியது யார்?

  ReplyDelete
 10. தேர்வுமையத்தை ஒதுக்கும் உரிமை TNPSC யிடம் தான் உள்ளது. முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வர்களுக்கு ஒரே தேர்வு மையத்தை ஒதுக்கிவிட்டு, இப்போது எதுவும் தெரியாதது போல் பேசுவதும் அறிக்கை விடுவதும், எங்களை ஏமாற்றுவது மட்டுமல்ல. எங்களை அலைகழிப்பத்ற்காக இப்படி தேர்வு மையங்களை தொலைவில் அமைப்பது என்பது தங்களின் சாமார்த்தியமான ஊழலை செய்யும் திறமையை வெளிக்காட்டுவதற்காகவும் நாங்கள் ஒதுங்கி செல்லவேண்டும் என்பதற்காகவும் தான்.

  ReplyDelete
 11. TRB ஆன்லைன் தேர்வு நடத்துவதால் அவர்களுக்கு பிரச்சனை இல்லை. எல்லாம் தனியார் நிறுவனமே பார்த்துக்கொள்ளும். யாருக்கு வேலை வழங்கவேண்டும் என்பதை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.
  97 பணியிடத்தில் 50 முதல் 60 வரை சுவாகதான். மீதமுள்ள பணியிடங்களுக்கு மட்டும் நீ நான் என்று போடி இருக்கும். அதையும் தடுக்கதான் இந்த தேர்வு மையம் ஒதுக்கீடு விவகாரம்.

  ReplyDelete
 12. Exactly correct ini ivangala nampi paduchomna nammala vida mutal yarume illa

  ReplyDelete
 13. Chennai centre keattaal Erodu kodukkuringa... apparam enna mY...ku Centre Select panna solringa. Poangada Nengalum Unga Examum...

  ReplyDelete
 14. ராமநாதபுரம் டூ கோவை சென்டர் போக முடியல...

  ReplyDelete
 15. Totally waste conducting exam

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி