TNPSC - குரூப் 2 , உதவி பொறியாளர் பணிக்கு கலந்தாய்வு தேதி அறிவிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 2, 2020

TNPSC - குரூப் 2 , உதவி பொறியாளர் பணிக்கு கலந்தாய்வு தேதி அறிவிப்பு!


*.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட அறிவிப்பு:

*.குரூப் 2 பதவியில் 23 துறைகளில் காலியாக இருந்த 1,338 பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தேர்வு 2018 நவ. 11-ல் நடந்தது. முதன்மை தேர்வு கடந்த ஆண்டு பிப். 23-ல் நடந்தது.

*.அதில் தேர்ச்சியானவர்களில் 2,667 பேர் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டனர்.

*.இதில் வெற்றி பெற்றவர்களுக்கு மதிப்பெண் அடிப் படையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.

*.அதற் கான கலந்தாய்வு பிப்ரவரி 10 முதல் 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்குரிய அழைப்பாணையை தேர்வர்கள் டிஎன்பிஎஸ்சி (www.tnpsc.gov.in) இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

*.அதே போல், 733 பதவிக்கான உதவி பொறியாளர் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் 1,491 பேருக்கு நேர்முகத்தேர்வு கடந்த மாதம் நடத்தப்பட்டது.

*.இதில் தேர்வான பட்டதாரிகளுக்கு பிப். 6, 7, 8-ம் தேதிகளில் கலந்தாய்வு நடக்கும். இதற்கான அழைப்பாணையைதேர்வர்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி