பிளஸ்1பொதுத்தேர்வு முடிவுகள் மே 14 - ல் வெளியீடு : தமிழக அரசு அறிவிப்பு! - kalviseithi

Mar 16, 2020

பிளஸ்1பொதுத்தேர்வு முடிவுகள் மே 14 - ல் வெளியீடு : தமிழக அரசு அறிவிப்பு!


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் 4 - ந்தேதி தொடங்கிய பிளஸ் - 1 வகுப்புக்கான பொதுத்தேர்வு வருகிற
26 - ந்தேதி வரை நடைபெற உள்ளது . இதில் தனித்தேர்வர்கள் , மற்றும் முன்னாள் மாணவர்கள் ஆகியோருக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் அடுத்த மாதம் 1 - ம் தேதி முதல் 13 ந்தேதி வரை நடத்தப்பட்டு  இதற்கான முடிவுகள் 24 - ந்தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

வழக்கமான மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி அடுத்த மாதம் 15 - ந்தேதி முதல் 25 - ந்தேதி வரை நடைபெற உள்ளது . இவர்களுக்கான தேர்வு முடிவு மே மாதம் 14 - ந்தேதி வெளியிடப்படுகிறது . விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை விடப்படுகிறது என அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி