அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது . அச்செயல்முறைகளில் , 03 . 05 . 2020 - ல் நடைபெறவுள்ள நீட் தேர்வினை எழுதுவதற்கு இணையதளம் வாயிலாக 02122019 முதல் 31122019 வரை மாணவர்கள் விண்ணப்பிக்கும் பொருட்டு அனைத்துமாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் தங்கள் நிர்வாக வரம்புக்குட்பட்ட அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு உரிய சுற்றறிக்கை அனுப்பிவைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது .
தற்போது பார்வை - 1ல் கண்டுள்ள புதுடில்லி தேசிய தேர்வு முகமையின் 13 . 03 . 2020 நாளிட்ட பொது அறிவிப்பின்படி நீட் தேர்விற்கு இணையதளம் மூலம் விண்ணப்பித்தவர்கள் , தங்கள் விண்ண ப்பங்களில் திருத்தம் மேற்கெள்வதற்கு 13 . 03 . 2020 முதல் 19 . 03 . 2020 ( பகல் 12 மணி வரை ) முடிய கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தினை அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் தங்கள் நிர்வாக வரம்புக்குட்பட்ட அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் அறியும் வண்ணம் பள்ளி விளம்பரப் பலகையில் இச்செய்தியை வெளியிடுவதோடு , இறை வணக்கக் கூட்டத்திலும் அறிவிக்குமாறு தொடர்புபைய பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . இணைப்பு : 13 / 03 / 2020 நாளிட்ட அறிவிப்பு
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி