10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மார்ச் 11-ல் ஹால்டிக்கெட் - kalviseithi

Mar 8, 2020

10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மார்ச் 11-ல் ஹால்டிக்கெட்


10-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ஹால்டிக்கெட் மார்ச் 11-ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தமிழக பள்ளிக்கல்வியின் சமச்சீர் பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்புக்கு மார்ச் 27-ம் தேதி பொதுத்தேர்வு தொடங்கவுள்ளது. மாநிலம் முழுவதும் 9 லட்சத்து 55 ஆயிரத்து 748 மாணவர்கள் இத்தேர்வை எழுத உள்ளனர்.இந்நிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர் களுக்கான ஹால்டிக்கெட் மார்ச் 11-ம் தேதி வெளியிடப்பட உள்ள தாக தேர்வுத் துறை அறிவித்துள் ளது. அதன்படி அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களும் தேர்வுத்துறை இணையதளத்தில் (www.dge.tn.gov.in) இருந்து ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பொதுத்தேர்வு பட்டியலில் மாணவர்களின் பெயர், பிறந்த தேதி, மொழி ஆகியவற்றில் ஏதாவது பிழை இருப்பின், அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் சம் பந்தப்பட்ட தேர்வு மைய கண் காணிப்பாளர்களை அணுகி திருத் தங்கள் மேற்கொள்ள மாவட்டக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும். தனித்தேர்வர்கள் நேரடி யாக இணையதளத்தில் இருந்து தங்களுக்குரிய ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி