5 ஆண்டு ஆனர்ஸ் சட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நுழைவுத்தேர்வுக்கு மார்ச் 31-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம் அறிவிப்ப - kalviseithi

Mar 8, 2020

5 ஆண்டு ஆனர்ஸ் சட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நுழைவுத்தேர்வுக்கு மார்ச் 31-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம் அறிவிப்ப


திருச்சியில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டு ஆனர்ஸ் சட்டப் படிப்பு மற்றும் ஓராண்டு கால முதுநிலை சட்டப் படிப்பில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வுக்கு மார்ச் 31-க் குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம் திருச்சியில் இயங்கி வருகிறது. இங்கு 5 ஆண்டு கால பிஏ., எல்எல்பி (ஆனர்ஸ்), பிகாம்., எல்எல்பி (ஆனர்ஸ்) ஆகிய இளங்கலை சட்டப் படிப்புகளும், எல்எல்.எம் (நிறுவன சட்டம்), எல்எல்.எம் (அறிவுசார் சொத்துரிமை), எல்எல்.எம் (இயற்கை வளங்கள்) ஆகிய முதுகலை சட்டப் படிப்புகளும் வழங்கப்படுகின்றன.

இதற்கான மாணவர் சேர்க்கை பெங்களூரு தேசிய சட்டப் பல் கலைக்கழகங்களின் கூட்டமைப்பு நடத்தும் நுழைவுத்தேர்வுமூலம் நடைபெறுகிறது. இங்கு சேரு வோருக்கு தமிழக அரசின் முதல் தலைமுறை பட்டதாரி உதவித்தொகை, ஆதி திராவிடர் நலத்துறை வழங்கும் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு உதவித் தொகைகள் கிடைக்கும்

இந்நிலையில், வரும் கல்வி ஆண்டு (2020-2021) மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை தமிழ் நாடு தேசிய சட்டப் பல்கலைக் கழகம் நேற்று வெளியிட்டது. அதன்படி, மேற்கண்ட சட்டப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் நுழைவுத்தேர்வுக்கு www.consortiumofnlus.ac.in என்ற இணையதளத்தில் மார்ச் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.படிப்பு, கல்விக்கட்டணம், உதவித்தொகை தொடர்பான விவரங்களை www.tnnlu.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று அப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி