வீடுகளில் நேரடியாக வழங்கப்படும் - ₹1,000/ உதவித்தொகை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 25, 2020

வீடுகளில் நேரடியாக வழங்கப்படும் - ₹1,000/ உதவித்தொகை!



 திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி கூறியதாவது : திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ரேஷன் கடை களிலும் குறைந்தபட்சம் 350 முதல் ஆயிரம் குடும்ப அட்டைகள் வரை உள்ளன . எனவே , தமிழக அரசு அறிவித்துள்ள ₹1000 ரேஷன் கடைகளில் வாங்குவதற்கு கூட்டம் ஒரே நேரத்தில் குவியும் வாய்ப்பு உள்ளது . அதனால் , இந்த உத வித்தொகையை வாங்க பொது மக்கள் யாரும் ரேஷன் கடைகளுக்கு வர வேண்டாம் .

 கூட்டுற வுத்துறை அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட ரேஷன் கடை பணியா ளர்கள் மூலம் , பொது மக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று பணத்தை வழங்க ஏற்பாடு செய்திருக்கிறோம் . | அதற்காக , ஒவ்வொரு ரேஷன் கடைக்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது.

உரிய பதிவேடுகளை கொண்டு வந்து , பணத்தை கொடுத்து விட்டு கையொப்பம் பெற்றுச் செல்வார்கள் . எந்த குடும்பமும் விடுபடாத வகையில் , உரிய நாட்களுக்குள் வழங்குவ தற்கான ஏற்பாடுகளை முறையாக திட்டமிட் டிருக்கிறோம் . எனவே , அனைவருக்கும் நிச்சயம் ₹1000 வீடு தேடி வரும் . அதேபோல் , அடுத்த மாதத்துக்கு தேவையான ரேஷன் பொருட்கள் , கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

எனவே , பொருட்கள் தட்டுப்பாடு இருக்காது . ரேஷன் பொருட்களை எப்போது வேண்டுமா னாலும் சென்று பெற்றுக் கொள்ளலாம் . கூட்டம் சேராமல் இடைவெளி விட்டு வரிசையில் நின்று பொருட்களை வாங்கி , அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைக்க வேண்டும்.

7 comments:

  1. The collectorTiruvannamalai has taken agood step.

    ReplyDelete
  2. அருமை அய்யா.
    எல்லா மாவட்டத்திலும் பின்பற்றலாமே!

    ReplyDelete
  3. Dindigul kku eppa tharuvinga govt . mmurugesan dindigul India 9750477613

    ReplyDelete
  4. Corana varama thadunga mmurugesan dindigul

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி