சட்டப்பேரவை விதி 110ன் கீழ் பள்ளிக்கல்வித்துறைக்கு முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகள் முழு தொகுப்பு ( நாள் 13.03.2020) - kalviseithi

Mar 13, 2020

சட்டப்பேரவை விதி 110ன் கீழ் பள்ளிக்கல்வித்துறைக்கு முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகள் முழு தொகுப்பு ( நாள் 13.03.2020)CM 110 Announcement- Date13.3.2020 ( pdf )

பள்ளிக் கல்வித் துறை 

1 . வரும் கல்வி ஆண்டில் , 5 கோடியே 72 லட்சம் ரூபாய் செலவில் 25 புதிய அரசு தொடக்கப் பள்ளிகள் துவங்கப்படும் . மேலும் , 10 அரசு தொடக்கப் பள்ளிகள் 3 கோடியே 90 லட்சம் ரூபாய் செலவில் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் . இப்பள்ளிகளுக்கு தேவைப்படும் 3 கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும் . மேலும் , தேவைப்படும் ஆசிரியர் பணியிடங்கள் பணி நிரவல் மூலம் நிரப்பப்படும் .

2 . வரும் கல்வியாண்டில் 15 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் . இப்பள்ளிகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் 26 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் செய்து கொடுப்பதுடன் , தேவையான கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் 9 கோடியே 87 லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும் .

3 . 30 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் . இப்பள்ளிகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் 55 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவிலும் தேவையான கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் 21 கோடியே 36 லட்சம் ரூபாய் செலவிலும் ஏற்படுத்தப்படும் .

4 . அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ , மாணவியரின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் , தமிழ்நாட்டில் முதற்கட்டமாக , 1 , 890 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் , கண்காணிப்பு கேமரா பொருத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது . வரும் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் , கண்காணிப்பு கேமரா பொருத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது . வரும் கல்வியாண்டில் மீதமுள்ள 4 , 282 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் 48 கோடியே 73 லட்சம் ரூபாய் செலவில் கண்காணிப்பு கேமரா வசதி அமைத்து தரப்படும் .

5 . அரசு பள்ளிகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி , பள்ளிக் கட்டடங்கள் மற்றும் அலுவலகங்களை பராமரிப்பதற்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் பராமரிப்பு மற்றும் செப்பனிடுதல் பணிகளுக்கான மானியத் தொகை 38 கோடியே 50 லட்சம் ரூபாயில் இருந்து 2020 - 21ஆம் ஆண்டில் , 100 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் .

11 comments:

 1. Part time teachers nillamai?? ????

  ReplyDelete
 2. இரட்டை இலையை மறந்துவிடுவதுதான் சிறப்பு மலரட்டும் உதயசூரியன் விடியட்டும் ஆசிரியரின் வாழ்வு

  ReplyDelete
 3. Aasiriyar Samuthaya nimrunthu nil. Kalam kaniyum in 2021

  ReplyDelete
 4. *1914 தேர்வர்களுக்கு அழைப்பு*: 2017-ல் TRB அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் (1058 பதவிகளுக்கு) நேர்மையாக தேர்வெழுதி சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்ட 1914 விண்ணப்பதாரர்கள் (2110 - 196 tainted candidates) உயர் நீதிமன்றகளில் writ மனு செய்ய முன்வரவும். "தவறிழைத்த 196 பேரை ஏன் இதுவரை தடைசெய்யவில்லை", என்ற எனது உச்சநீதிமன்ற PIL மனுவில், கீழ்-நீதிமன்றங்களை நாட 'Liberty' கொடுக்கப்பட்டுள்ளது. 2017-ல் ஏமாற்றப்பட்ட நேர்மையான தேர்வர்களும், 2019-ல் எதிர்பார்ப்பில் தேர்வெழுத போகும் தேர்வர்களும், ஆசிரியர்கள் இன்றி தவிக்கும் பாலிடெக்னிக் மாணவர்களும் இதனால் பயன் அடைவார்கள். ஊழல், முறைகேடுகள் களையப்படும். நன்றி! __ K.M.கார்த்திக் (+917395868135), மனுதாரர்


  உங்கள் HAll Ticket-ஐ, Score card-ஐ காண்பித்து, உங்கள் அடையாளத்தை உறுதி படுத்தி, இந்த whatsapp குழுவில்இணையவும்.

  ReplyDelete
 5. *1914 தேர்வர்களுக்கு அழைப்பு*: 2017-ல் TRB அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் (1058 பதவிகளுக்கு) நேர்மையாக தேர்வெழுதி சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்ட 1914 விண்ணப்பதாரர்கள் (2110 - 196 tainted candidates) உயர் நீதிமன்றகளில் writ மனு செய்ய முன்வரவும். "தவறிழைத்த 196 பேரை ஏன் இதுவரை தடைசெய்யவில்லை", என்ற எனது உச்சநீதிமன்ற PIL மனுவில், கீழ்-நீதிமன்றங்களை நாட 'Liberty' கொடுக்கப்பட்டுள்ளது. 2017-ல் ஏமாற்றப்பட்ட நேர்மையான தேர்வர்களும், 2019-ல் எதிர்பார்ப்பில் தேர்வெழுத போகும் தேர்வர்களும், ஆசிரியர்கள் இன்றி தவிக்கும் பாலிடெக்னிக் மாணவர்களும் இதனால் பயன் அடைவார்கள். ஊழல், முறைகேடுகள் களையப்படும். நன்றி! __ K.M.கார்த்திக் (+917395868135), மனுதாரர்


  உங்கள் HAll Ticket-ஐ, Score card-ஐ காண்பித்து, உங்கள் அடையாளத்தை உறுதி படுத்தி, இந்த whatsapp குழுவில்இணையவும்.

  ReplyDelete
 6. தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளேன்.போட்டி தேர்வுக் என்ன படிக்க வேண்டும். syllabus இருக்க

  ReplyDelete
 7. TRB-POLYTECHNIC & PG-TRB MATHS, ENGLISH, FOR ADMISSION
  CONTACT ARUN ACADEMY ERODE. CELL -9944500245
  (Material available)

  ReplyDelete
 8. சம வேலைக்கு சம ஊதியம்?

  ReplyDelete
 9. Last ten year asked equal salary for second. Grade teachers

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி