பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியஉயர்வு-பணி நிரந்தரம் குறித்து 110-வது விதியில் முதல்வர் அறிவிப்பு வெளியிடுவாரா? - kalviseithi

Mar 3, 2020

பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியஉயர்வு-பணி நிரந்தரம் குறித்து 110-வது விதியில் முதல்வர் அறிவிப்பு வெளியிடுவாரா?

பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியஉயர்வு-பணி நிரந்தரம் குறித்து 110-வது விதியில் முதல்வர் அறிவிப்பு வெளியிட வேண்டும். தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்

தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கருணை மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டு 2012-ம் ஆண்டு 16549 பகுதிநேர ஆசிரியர்கள் ரூ.5ஆயிரம் தொகுப்பூதியத்தில் உடற்கல்வி ஓவியம் கணினி தையல் இசை தோட்டக்கலை கட்டிடக்கலை வாழ்வியல்திறன்கல்வி பாடங்களை நடத்திட அனைவருக்கும்கல்விஇயக்க(சமக்ர சிக் ஷா) நிதியை பெற்று பள்ளிக்கல்வித்துறை மூலம் நியமனம் செய்யப்பட்டோம்.கடந்த 8 ஆண்டுகளில் ரூ.2ஆயிரத்து 700 மட்டுமே ஊதியஉயர்வு வழங்கப்பட்டுள்ளது.இதனால் 9-வது ஆண்டாக பணிபுரியும் எங்களுக்கு தற்போது தரப்படும் சம்பளம் ரூ.7ஆயிரத்து 700 தினக்கூலியைவிட குறைவானது. வருடாந்திர சம்பளஉயர்வு 10 சதவீதம் தரப்பட்டிருந்தால் சம்பளம் ரூ.10ஆயிரம் எப்போதே கிடைத்திருக்கும். 16549 பேரில் 5 ஆயிரம் காலிப்பணியிடங்களின் நிதியை தற்போது பணிபுரிந்து வரும் 12ஆயிரம் பேருக்கு பகிர்ந்து வழங்கினாலே ரூ.11ஆயிரம்வரை வழங்கமுடியும். இதனுடன் 7-வது ஊதியக்குழு 30 சதவீதம் ஊதிய உயர்வை அமுல்செய்தால் ரூ.15ஆயிரம் வரை அரசு வழங்க வழி இருக்கிறது. எனவே விலைவாசி உயர்வுக்கேற்ப எங்களுக்கு சம்பள உயர்வைதர அரசு முன்வரவேண்டும்.9 ஆண்டுகளாக பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்யாததால் அரசின் பணபலன்களை பெறமுடியாமலும், போனஸ், வருங்கால வைப்பு நிதி, மருத்துவ காப்பீடு, பணி ஓய்வு மற்றும் இறந்துபோன பகுதிநேர ஆசிரியர்களின் குடும்பங்களுக்கு குடும்பநலநிதி எதுவும் கிடைக்காமலும் வாழ்வாதாரத்தை இழந்து வருகிறோம். இவ்வாறு அவர் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து செந்தில்குமார் கூறுகையில் 10-வது கல்வியாண்டு தொடங்கவுள்ள நிலையில் எங்களை பணிநிரந்தரம் செய்யாததால், மே மாதம் சம்பளம் இதுவரை 8 ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வருவதால் அனைவருக்கும் ரூ.53ஆயிரம்வரை இழந்து தவித்து வருகிறோம். 


எங்களுக்கான பணிநியமன ஆணையில் மே மாதம் சம்பளம் கிடையாது என குறிப்பிடாத நிலையில் இதுபோன்ற நடவடிக்கை எங்களை
மேலும் பாதிக்கிறது. வேலைநிறுத்த காலங்களில் அரசின் உத்தரவின்படி ஊதியம் எதுவுமின்றி முழுநேரமும் பள்ளிகளை திறந்து பாடம் நடத்திய பகுதிநேர ஆசிரியர்களுக்கு அரசு சலுகைகளை செய்ய முன்வரவேண்டும் என எதிர்பார்த்து வருகிறோம். நாங்கள் நியமனம் செய்யப்பட்டதோடு 2-வது முறையாக ஆட்சி செய்யும் அதிமுக அரசின் பட்ஜெட்டில் இதுவரை ஒருமுறைகூட பகுதிநேர ஆசிரியர்களுக்கு
சம்பளஉயர்வு மற்றும் பணிநிரந்தரம் குறித்து அறிவிப்புகள் வெளியிடாதது எங்களை ஏமாற்றத்தில் ஆழ்த்துகிறது. ஒன்று எங்களை பணிநிரந்தரம் செய்யுங்கள். இல்லையெனில் ரூ.18ஆயிரம் குறைந்தபட்ச சம்பளத்தை கொடுங்கள் என்ற இரட்டை கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம்.

3 ஆண்டுக்குமேல் பணிபுரிந்த 16ஆயிரம் துப்புரவு பணியாளர்களை சிறப்பு காலமுறையில் பணியமர்த்துகிறது அரசு. எனவே 9 ஆண்டுகளாக பாடம் நடத்தும் 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களைய காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த முன்வரவேண்டும். தற்போது எங்களுக்கு ரூ.7ஆயிரத்து 700 சம்பளம்தர அரசு ஆண்டுக்கு ரூ.100கோடி செலவிடுகிறது. எங்களை இடைநிலை ஆசிரியர்கள் நிலையில் பணியமர்த்தினால் அரசு மேலும் ரூ.300கோடி நிதிஒதுக்கினோலே போதும். எனவே இம்முறையாவது பட்ஜெட்டில் 110-ன் கீழ் முதல்வர் அறிவிப்பு வெளியிட
வலியுறுத்தி கேட்டுவருகிறோம்.

தமிழகம் முழுவதும் இருந்து பகுதிநேர ஆசிரியர்கள் கவர்னர் முதல்வர் துணைமுதல்வர் பள்ளிக்கல்விஅமைச்சர் பணியாளர் நிர்வாக சீர்திருத்ததுறைஅமைச்சர் பள்ளிக்கல்வி செயலாளர் ஆணையர் மாநிலதிட்டஇயக்குனர் ஊதியக்குறை தீர்க்கும் குழுதலைவர் மற்றும் சட்டசபை
மனுக்கள் குழுதலைவர் என 10 பேருக்கு கருணைமனுக்களை அனுப்பி வருகின்றனர். எனவே அரசு கருணையிடன் 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் வாழ்வாதாரம் முன்னேற்ற புதிய அரசாணை பிறப்பித்து உதவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தொடர்புக்கு
சி.செந்தில்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு
செல் 9487257203

22 comments:

 1. God only help part time teachers

  ReplyDelete
 2. பணி நிரந்தரம் செய்யுங்கள்

  ReplyDelete
 3. உங்களுக்கான பணியிடம்,
  நிரந்தரம் ஆக்கப்படும்...
  எடப்பாடி பழனிச்சாமி அவர்களை
  அடுத்த தேர்தலிலும் வெற்றி பெற செய்து மீண்டும் முதல்வராகும்
  வாய்ப்பை வழங்குகிறது..நமது கடமை...

  ReplyDelete
 4. *TRB தேர்வு முறைகேடுகள் மறைக்கப்படுகிறதா?*
  |Mar 03, 2020|

  சமீபத்தில் TNPSC குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்தது. உடனே TNPSC ஆணையம், தவறு செய்த 99 பேரை வாழ்நாள் தடை செய்துவிட்டு அத்தேர்வை தொடர்ந்து நடத்துகிறது. இது சம்மந்தமாக சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் "நேர்மையாகத் தேர்வு எழுதியவர்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காகவே தேர்வு ரத்துசெய்யப்படவில்லை" என்று விளக்கம் கொடுத்தார்.

  இதேபோல, 2017-இல் TRB நடத்திய அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் 196 தேர்வர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக கண்டுபிடிக்கப்பட்டது. உடனே தேர்வு ரத்து செய்யப்பட்டது. நேர்மையாக தேர்வெழுதி வெற்றி பெற்றவர்கள் பாதிக்கப்பட்டனர். ஆனால், முறைகேட்டில் ஈடுபட்ட 196-பேரை TRB வாரியம் இதுவரை தடை செய்ய வில்லை. யார் அந்த 196 பேர் என்று கூட இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை. தற்போது 2019-இல் TRB-ன் புது அறிவிப்பாணை மூலம் மறுதேர்வு நடக்கும் நிலையில், அந்த 196 தேர்வர்களும் மீண்டும் விண்ணப்பம் செய்துள்ளனரா என்பதும் புதிராக உள்ளது. TNPSC-க்கு ஒரு நியாயம் TRB-க்கு ஒரு நியாயமா, என்று இளைஞர்கள் அதிர்ச்சி அடைத்துள்ளனர்.

  2017-ஆம் ஆண்டின் TRB தேர்வு ரத்து செய்தபோது மறுதேர்வுக்கு எந்த விண்ணப்ப கட்டணமும் வசூல் செய்யமாட்டோம் என்று அரசு சார்பில் நீதிமன்றத்தில் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் இன்று மறுதேர்வுக்கு லட்சக்கணக்கான விண்ணப்பதாரர்களிடம் தேர்வு கட்டணம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இது நீதிமன்ற அவமதிப்பு ஆகும்.

  மறுதேர்வு நடக்கும் முன்னரே பல முரண்பாடுகள் நிறைந்து உள்ளதால், 2019-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட TRB மறுதேர்வை நிறுத்திவைக்க (stay) வேண்டும் என, சமூக சேவகர் திரு.K.M.கார்த்திக் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த பொது நல மனு (Diary no.5193/2020), நீதிபதி. திரு.நாகேஸ்வ்ர் ராவ் அடங்கிய அமர்வு முன் நேற்று (02/03/2020) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மெட்ராஸ் உயர் நீதிமன்றத்திற்கு சென்று வழக்கை நடத்தலாம் என உரிமை வழங்கி, வழக்கை முடித்து வைத்தனர்.

  கடந்த 2019-இல் உச்சநீதிமன்றத்தின் இதே அமர்வின் உத்தரவின் பேரிலேயே TRB வாரியம் புது (2019) அறிவிக்கையை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. உச்ச நீதிமன்றத்தின் அறிவுரைப்படி மதுரை அல்லது சென்னை அமர்வின் முன் இந்த வழக்கு விரைவில் எதிர்பார்க்க படுகிறது.

  இது சம்மந்தமாக மனுதாரரும் சமூக சேவகருமான திரு.K.M.கார்த்திக் கூறியதாவது: விண்ணப்பித்த அனைவரும் ஏமாறும் வகையில் TRB வாரியம் நடந்து கொண்டுள்ளது. TRB வாரியம் தனது இரண்டு அறிவிக்கைகளின் கீழ் விண்ணப்பம் செய்த அணைத்து தேர்வர்களையும் இன்று திருப்தி படுத்தவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆகவே 2017-ல் நேர்மையான தேர்வெழுதியவருக்கு சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்க வேண்டும். 2019-ன் அறிவிப்பாணையில் நிலுவையில் உள்ள சுமார் 400/500 காலி இடங்களை இணைத்து, புதிதாக சேர்க்கப்படும் அந்த காலியிடங்களுக்கு தேர்வை தொடர்ந்து நடத்த வேண்டும். இந்த வகையில் இரு தரப்பை சேர்ந்த தேர்வர்களும் பலன் அடைவார்கள். மாணவருக்கும் தகுதியான ஆசிரியர் கிடைப்பார்கள். அரசுக்கும் செல்வு மிச்சம், என்றார்.

  ReplyDelete
 5. Sir Yegala permanent panuga Panama poga vikara velavasi la orutha indha salary la kudubam nadatha mudiyuma nu yosiga mathavaga soilaradhu pola weekly 3 days dhana work nu soiladhiga Naga work pandrama illaya nu ungaluku theriyum yega kastamum ungaluku theriyum.indha site la neraya government school teachers and HMS pakaraga avagala yarachum oruthar soilatum Naga velaya seiyaradhila nu with school nameoda apo theriyum Naga yena vela seiyarom nu Naga yega life ku oru vali soiluva nu KEKAROM pls help me sir.

  ReplyDelete
 6. வெளியிடமாட்டார் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 7. no chance. part time job only you know

  ReplyDelete
 8. part time job nu theriju thaney poneenka sir appuram eppadi full time job aahum sir.new rules select exam based posting.

  ReplyDelete
 9. part time job vittu veliyey vaanka appo edavadu posting nadakkum sir

  ReplyDelete
 10. எடுபுடி அரசு செய்யாது, அவர்கள் ego touch panramari செய்தால் வாய்ப்புகள் உண்டு! உங்கள் மூளையை பயன்படுத்துகள் நண்பர்களே. (எ.க) அனுமதி பெற்று பேரனியாக அம்மா சமாதியில் உங்கள் பிரச்சினையினை வைத்துவிட்டு முறையிடலாம்.ஊடகவெளிச்சம் கிடைக்கும் . இதனை பேரவை கூடுவதற்குள் செய்ய வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. Ok varisail saami kumbiduvathu nallathu,,,,seniority ok,,atherkaga exam um ilama,seniority ilana permanent panna epdi pannuvanga, ,palaya padi seniority panna sollunga,, part time job kuda ilama,ungala Visa senior ellam job ilama irukangalea

   Delete
 11. Pasiyaa kalangal poivittathu.pl.ethavathu panna sollunga illai ellorum resign.pannalam.appothavathu mudivu kidaikum

  ReplyDelete
 12. Replies
  1. Nanga tet pass panni 7 years aguthu pla consider ....

   Delete
  2. P e t,,posting selection agi innum posting podala sir

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி