மார்ச் , ஏப்ரல் மாதத்திற்கான வீட்டு வாடகைத் தொகையை இரண்டு மாதங்கள் கழித்து பெற்றுக் கொள்ள வேண்டும் - முதல்வரின் இன்றைய ( 31.03.2020 ) செய்தி அறிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 31, 2020

மார்ச் , ஏப்ரல் மாதத்திற்கான வீட்டு வாடகைத் தொகையை இரண்டு மாதங்கள் கழித்து பெற்றுக் கொள்ள வேண்டும் - முதல்வரின் இன்றைய ( 31.03.2020 ) செய்தி அறிக்கை!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு எடப்பாடி K . பழனிசாமி அவர்களின் அறிக்கை - நாள் 31 . 3 . 2020

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஏற்படுத்தப்பட்ட உயர் அதிகாரிகள் கொண்ட பல்வேறு குழுக்களுடன் நேற்றைய தினம் ( 30 . 3 . 2020 ) கலந்தாய்வு செய்த பின்னர் , இன்று நான் உயரதிகாரிகளுடன் ஆலோசித்து தமிழ்நாட்டு மக்களின் நன்மை கருதி , கீழ்க்கண்ட உத்தரவுகளை பிறப்பிக்கின்றேன் :

1 . கூட்டுறவு நிறுவனங்களில் பயிர்க்கடன் பெற்றவர்கள் தவணைத்தொகை செலுத்துவதற்கான கால அவகாசம் 3 மாதங்களுக்கு ( 30 . 6 . 2020 வரை ) நீட்டிக்கப்படுகிறது .

2 . வீட்டுவசதி கூட்டுறவு சங்கங்களுக்கு தவணைத்தொகை செலுத்துவதற்கான கால அவகாசம் 3 மாதங்களுக்கு ( 30 . 6 . 2020 வரை ) நீட்டிக்கப்படுகிறது .

3 . தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்கு தவணைத்தொகை செலுத்துவதற்கான கால அவகாசம் 3 மாதங்களுக்கு ( 30 . 6 . 2020 வரை ) நீட்டிக்கப்படுகிறது .

4 . அனைத்து மீனவ கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கைத்தறி கூட்டுறவு சங்கங்களிலிருந்து பெறப்பட்ட கடனுதவிகளுக்கான தவணைத்தொகை செலுத்துவதற்கான கால அவகாசம் 3 மாதங்களுக்கு ( 30 . 6 . 2020 வரை ) நீட்டிக்கப்படுகிறது .

5 . தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் ( TIIC ) கடன் பெற்றுள்ள சிறு , குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடன் தவணைகளைச் செலுத்த மூன்று மாத கால அவகாசம் ( 30 . 6 . 2020 வரை ) வழங்கப்படுகிறது .

6 . ' கோவிட் நிவாரணம் மற்றும் மேம்பாட்டுத் திட்டம் ' என்ற சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பிலான சிறப்பு கடனுதவித் திட்டம் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்திடம் கடனுதவி பெற்றுள்ள 2 , 000 சிறு , குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் அவசர மூலதனத் தேவைகளுக்காக செயல்படுத்தப்படும் .

7 . சிப்காட் நிறுவனத்திடம் மென்கடன் பெற்றுள்ள தொழில் நிறுவனங்கள் கடன் தவணை செலுத்த மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படுகிறது .

8 . சிப்காட் தொழில் பூங்காவில் செயல்பட்டு வரும் தொழில் நிறுவனங்கள் பராமரிப்புக் கட்டணம் செலுத்துவதற்கு மூன்று மாத கால அவகாசம் ( 30 . 6 . 2020 வரை ) வழங்கப்படுகிறது .

9 . மோட்டார் வாகன ( Motor Vehicles Act ) , சட்டப்படி உரிமங்கள் மற்றும் வாகன தகுதிச் சான்றுகள் ( Licence & FC ) புதுப்பிக்கப்பட வேண்டிய கால அவகாசம் 3 மாதங்களுக்கு ( 30 . 6 . 2020 வரை ) நீட்டிக்கப்படுகிறது .

10 . எடைகளும் , அளவைகளும் சட்டம் ( Weights & Measures Act ) , தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் ( TN Shops & Establishments Act ) , உள்ளாட்சி அமைப்புகளினால் அமல்படுத்தப்படும் கேடும் குற்றமும் பயக்கும் தொழிற்சட்டம் ( Dangerous & Offence Act ) , ஆகியவற்றின் கீழ் புதுப்பிக்கப்பட வேண்டிய உரிமங்களின் கால அவகாசம் 3 மாதங்களுக்கு ( 30 . 6 . 2020 வரை ) நீட்டிக்கப்படுகிறது .

11 . உள்ளாட்சி அமைப்புகளுக்கு மக்கள் செலுத்த வேண்டிய சொத்துவரி , குடிநீர் கட்டணம் போன்றவை செலுத்துவதற்கான கால அவகாசம் 3 மாதங்களுக்கு ( 30 . 6 . 2020 வரை ) நீட்டிக்கப்படுகிறது .

12 . தற்போது உள்ள சூழ்நிலையில் , வாடகை வீடுகளில் குடியிருப்போர் வாடகை செலுத்துவதில் உள்ள சிரமங்களை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர் . எனவே , மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான வீட்டு வாடகைத் தொகையை இரண்டு மாதங்கள் கழித்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்று வீட்டு உரிமையாளர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .

தமிழ்நாடு அரசு கொரானா வைரஸ் தொற்றினை தடுப்பதற்காக 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது . அதே சமயத்தில் , இந்நோய்த் தொற்று இரண்டாம் கட்டத்தில் இருப்பதாகவும் , அது மூன்றாம் கட்டத்திற்குப் பரவாமல் இருக்க பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தந்து , தங்கள் வீட்டிலேயே இருப்பது மிகவும் அவசியம் என்று நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர் . எனவே , அத்தியாவசிய பொருட்களை வாங்க அரசு பிறப்பித்துள்ள நேரக் கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் . மேலும் , எந்தவிதமான வதந்திகளை நீங்கள் நம்ப வேண்டாம் . வதந்திகள் பரப்புவோர் மீது தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது . எனவே உங்களின் நன்மைக்காகவும் , உங்கள் குடும்பத்தின் நன்மைக்காகவும் , நம் நாட்டின் நன்மைக்காகவும் , பொதுமக்கள் அனைவரும் அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன் .

“ விழித்திருப்போம் ; விலகியிருப்போம் ; வீட்டிலேயே இருப்போம் ; கொரோனாவை வெல்வோம் . ”

K . பழனிசாமி தமிழ்நாடு முதலமைச்சர்

வெளியீடு : இயக்குநர் , செய்தி மக்கள் தொடர்புத்துறை , சென்னை - 9

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி