ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி: தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் - kalviseithi

Mar 20, 2020

ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி: தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்

ஆசிரியர்கள் உள்ளிட்ட மாநில அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் பிகே.இளமாறன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்- அரசு ஊழியர்களுக்கும் 4% அகவிலைப் படியினை உயர்த்தி வழங்கிடக் கேட்டுக்கொள்கிறேன்.
அகவிலைப்படி, ஆறு மாதத்திற்கு ஒருமுறை விலைவாசி ஏற்றம்- இறக்கம் என்பதை அடிப்படையாகக் கொண்டு புள்ளியியல் அடிப்படையில் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஆசிரியர்-அரசு ஊழியர்கள், ஓய்வூதிய தாரர்கள், குடும்ப ஓய்வூதிய தாரர்கள் உள்ளிட்ட 18 லட்சம் ஆசிரியர்- அரசு ஊழியர்கள் குடும்பங்கள் என மொத்தம் ஒன்றரைக் கோடிப் பேர் பயன்பெறுவார்கள்.
அரசின் நலத்திட்டங்களை கடைக்கோடி குடிமகனுக்கும் எடுத்துச் செல்லும் பணியினை ஆசிரியர்- அரசு ஊழியர்கள் சிறப்பான முறையில் செய்துவருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் மத்திய அரசு அறிவித்துள்ள 4% அகவிலைப் படியினை மாநில ஆசிரியர்- அரசு ஊழியர்களுக்கும் உயர்த்தி வழங்கிட ஆவன செய்யும்படி தமிழக முதல்வரை, தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வேண்டுகின்றேன்'' என்று தெரிவித்துள்ளார்.

9 comments:

 1. Eppa ethai ketkavendum endra adippadai arivu illathavarkal. please be calm it's rotien work neenga korikkai vidukkavittalum avarkal kodupparkal.

  ReplyDelete
 2. Yarra Evenga 🙏 Tr & govt staff amaithiya erukkanga nee puralia rise panra moodu 🤐

  ReplyDelete
 3. Arasu uliyar sirappa seirana Nethu than building Poi license ku 30000 thousand kekaran Ellam correct ah irunthum engaloda emergency ku kuduthu tholaichom Avanuku samapalme venam lanjam vangara kasulaye avan kudumpam Semaya irukum

  ReplyDelete
 4. இல‌ஞ்ச‌ம் வாங்காத‌ எத்த‌னையோ நேர்மையான‌ அதிகாரிக‌ள்,அர‌சு ஊழிய‌ர்க‌ள் இருக்காங்க‌ ந‌ண்பா...இன்னும் சொல்ல‌ப்போனால் இல‌ஞ்ச‌ வாச‌னையே நுக‌ராத‌,நுக‌ர‌வே முடியாத‌ சேவை ம‌ன‌ப்பான்மையுட‌ன் ப‌ணியாற்றும் ஆசிரிய‌ர் ச‌முதாய‌ம் உங்க‌ள் க‌ண்க‌ளுக்கு தெரிய‌வில்லையா?...
  ப‌திவிட்ட‌வ‌ருக்கு
  இந்த‌ நேர‌த்தில் இக்கோரிக்கை தேவைய‌ற்ற‌து...த‌விர‌ கோரிக்கை இத‌ற்கெல்லாம் வைக்க‌ வேண்டிய அவ‌சிய‌மே இல்லை...இவை தானாக‌வே ந‌ட‌க்கும்...சிதை நெருப்பில் சிக‌ரெட் ப‌ற்ற‌ வைக்க‌ வேண்டாம்...

  ReplyDelete
 5. பிச்சை எடுப்பது தவறு.

  ReplyDelete
 6. பொறாமை கொண்ட சிலருக்கு அரசியல் வாதி பலஆயிரம் கோடியில் அடிக்கிறது கண்ணுக்கு தெரியாது. ஆசிரியர்களின் சில ஆயிரம் சம்பளத்திற்க்கு தான் இந்த அழுகை. இவர்கள் அரசியல்வாதிகளிடம் ஓட்டுக்கு காசு வாங்கிய குற்றவாளிகளாக இருப்பார்களோ என்னவோ?

  ReplyDelete
 7. Sonnan parunga oru dialogue antha panatha cover la pottu Anga vachuruchurunga korana nu soldranga nan aprma eduthukaren nu
  Nallavangala irukara goverment staff irukanga but kannula pandravanga rompa kammi Athu than kastama iruku Aduthavanga situation theriyama kasu kekaranga

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி