கணினி பயிற்றுநர்கள் பதவி உயர்வுக்கு 8 ஆண்டுகள் பணிபுரிந்து இருக்க வேண்டும் என்ற நிபந்தனை தள்ளுபடி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 17, 2020

கணினி பயிற்றுநர்கள் பதவி உயர்வுக்கு 8 ஆண்டுகள் பணிபுரிந்து இருக்க வேண்டும் என்ற நிபந்தனை தள்ளுபடி!



பள்ளிக் கல்வித் துறையில் ஏற்கனவே அரசு மேல்நிலைப்பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட 2689 கணினி பயிற்றுநர்கள் பணியிடங்களில் காலியாக உள்ள 814 பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் கணினி பயிற்றுநர் நிலை - 1 பணியிடங்களாக நியமிக்கப்பட அரசால் ஆணையிடப்பட்டுள்ளது .

மேலும் , கணினி பயிற்றுநராக பணிபுரிபவர்களை கணினி பயிற்றுநர் நிலை 1 ஆக பதவி உயர்வு செய்வதற்கு ஏதுவாக பார்வை3 - ல் குறித்துள்ள தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநர் ( தொழிற்கல்வி ) அவர்களின் செயல்முறைகளின்படி தகுதிவாய்ந்தோர் பெயர்பட்டியல் கோரி சுற்றறிக்கை அனுப்பப்பட்டது . பார்வை 4ல் குறித்து சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பில் அரசாணை எண் . 26 பள்ளிக்கல்வித் துறை நாள் . 12 . 02 . 2019ல் வரையறை செய்யப்பட்ட குறைந்தபட்சம் 8 ஆண்டுகள் பணிபுரிந்து இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை தள்ளுபடி செய்து 3 மாதக் காலத்திற்குள் உரிய ஆணை வழங்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது .

இப்பொருளில் பார்வை 5ல் குறித்து இவ்வியக்கக கடிதம் மூலம் அரசுக்கு கருத்துருக்கள் அனுப்பப்பட்டு அரசின் ஆணை எதிர்பார்க்கப்படுகிறது . அரசின் ஆணையை எதிர்நோக்கி தற்போது விவரங்கள் பெறப்பட வேண்டியுள்ளது . அதனடிப்படையில் பார்வை 1 - ல் குறித்துள்ள அரசாணையில் கணினி பயிற்றுநர் நிலை - 1 ஆக ( Post Graduate Cadre ) ( with the minimum educational qualifications based on NCTE norm ) பதவி உயர்வு மூலம் பூர்த்தி செய்திட பார்வை 1ல் காண் அரசாணையில் பத்தி 1ல் தெரிவிக்கப்பட்டுள்ள கல்வித் தகுதிகள் பெற்றிருக்க வேண்டும் . கணினி பயிற்றுநர் பணியிடங்க ளுக்கு ரூ . 9300 - 34800 + 4800 த . ஊ ( Pre - Revised Scale ) ( Level 18 , Rs . 36900 1 , 16 , 600 / - ) ( Revised Scale ) என்ற ஊதிய ஏற்ற முறையில் ஊதியம் பெற ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன .

அவ்வாணையில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வித் தகுதியின் அடிப்படையில் கீழ்க்காணும் கல்வித் தகுதிகள் ( கணினி பயிற்றுநர் நிலை - 1 ஆக பதவி உயர்வு அளித்திட ) பெற்றிருக்க வேண்டும் .

computer instructor gr I revised Proceedings - Download here

1 comment:

  1. நடுநிலை பள்ளியில் இடைநிலை ஆசிரியராக நான் பணிபுரிகிறேன். MSc computer science BEd முடித்துள்ளேன். எனக்கு கணினி பயிற்றுநர் பதவி கிடைக்குமா?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி