கொரனோ முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 9ஆம் வகுப்புவரை விடுமுறை அளிக்க ஆசிரியர் சங்கம் கோரிக்கை! - kalviseithi

Mar 15, 2020

கொரனோ முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 9ஆம் வகுப்புவரை விடுமுறை அளிக்க ஆசிரியர் சங்கம் கோரிக்கை!
1 . கொரனோ வைரஸ் உலகம் முழுவதும் பரவி மனிதர்களை கொன்று குவிக்கிறது . இவ்வைரஸ் இந்தியாவில் பல மாநிலங்களில் மிக விரைவாக பரவி வருகிறது . தமிழகத்திற்கு அருகே உள்ள கேரளா , கர்நாடகா மற்றும் பல மாநிலங்களில் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது .

2. மருத்துவர்களின் ஆலோசனைப்படி மனிதர்கள் கூட்டமாக வசித்தால் இத்தொற்றுநோய் மிக விரைவில் பரவுகிறது .

3. பள்ளி என்ற பொது அமைப்பும் மாணவர்கள் கூட்டம் கூட்டமாக படிக்கக்கூடிய செயல் இந்நோய் பள்ளி மாணவர்களை எக்காரணத்தைக் கொண்டும் பாதிக்காமல் இருப்பதற்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தையும் விடுமுறை விட்டு மாணவர்களின் உயிரைக் காக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

4 . 12 , 11 , 10 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளைத் தவிர ( 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை ) தேர்வுகளை இரத்து செய்து பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட வேண்டும் .

5. அரையாண்டு தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்ணை வைத்து முழு ஆண்டு தேர்ச்சி வழங்க வேண்டும் ( ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் வரை ) .

6 comments:

 1. Y the teachers assosiation spoiling the name of teachers by asking the leave like this......

  ReplyDelete
 2. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை வழங்குவது நல்லது.. மேலும் விடுமுறை காலத்திற்குரிய ஆசிரியர்களின் ஊதியத்தை பாதிக்கப்படும் மக்களுக்கு மருத்துவ உதவிகளை செய்வதற்கு அரசு பயன்படுத்திக் கொள்ளலாம்.. இதற்கு மக்கள் நலனுக்காக குரல் கொடுக்கும் ஆசிரியர் சங்கங்கள் முழு ஆதரவு தெரிவிக்கும்.....

  மேலும் கொரோனாவால் சரிவடைந்துள்ள பொருளாதார இழப்பை சரிசெய்ய மே மாதம் வரையில் பணி செய்யாத நாட்களுக்கான ஊதியத்தை அரசே பிடித்தம் செய்து கொள்ளலாம் என்பதே ஆசிரியர்களின் சிறு உதவியாக இருக்கும்....

  மக்களின் நலனே முக்கியம்... அதற்காக எதையும் இழக்க ஆசிரியர் சங்கங்கள் தயார் என்பதை நிலைநாட்ட வேண்டும்

  ReplyDelete
 3. ஆசிரியர்களுக்கு எதிராக செயல் படுவதில் ஆசிரியர் சங்கம் ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டு கிறது ! எந்த ஆசிரியரும் விடுமுறை கேட்கவில்லை எவன் எப்படி போனால் என்ன வயிறு எரிச்சல் காரர்களிடம் மாட்டாமல் இருந்தால் போதும்

  ReplyDelete
 4. வீணா போனவங்களே உங்களுக்கு வேண்டும் னா லீவு வேண்டும்ன்னு கேளுங்க டா.எதற்காக ஆசிரியர் சங்கம் னு சொல்லி கேக்கிறீங்க. இந்த ஆட்சி ல ஆசிரியர்களை எவ்வளவு அசிங்கம் பண்ணுனாங்க அவங்களோட காலை நக்குறீங்களே

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி