திருவிழாக்கள் நோயிலிருந்து மக்களை காப்பாற்றியது - எவ்வாறு? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 18, 2020

திருவிழாக்கள் நோயிலிருந்து மக்களை காப்பாற்றியது - எவ்வாறு?


கொள்ளை நோய் ஏற்படும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை நாம் மற்ற நாடுகளில் இருந்து கற்று கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. நமது கிராமங்களில் உள்ள மாரி அம்மன் கோவில் திருவிழாக்களில் என்னென்ன விதிமுறைகள் பின்பற்றினர் என கூர்ந்து கவனியுங்கள்.

1. ஊர் எல்லை கட்டுதல். தம் ஊரில் உள்ளவர்கள் அடுத்த ஊருக்கு செல்ல கூடாது. அடுத்த ஊரில் உள்ளவர்கள் நம் ஊருக்குள் வரக்கூடாது.

2. வீதி மற்றும் வாசல்கள் தோறும் வேப்பிலை மாவிலை தோரணங்கள் மற்றும் சாணி மெழுகுதல்.  வீட்டினுள் கிருமிகள் நுழையாமல் தடுத்தல்.

3. வீட்டு வாசலில் மஞ்சள் பொடி கலந்த நீரை அண்டாவில் கரைத்து வைத்தல். வீட்டிற்க்குள் வருபவர்கள் கை கால் அலம்பி வர வேண்டும்.

4.அசைவ உணவை அரவே தவிர்த்து ஒரு வேளை அல்லது இரு வேளை மட்டும் சைவ உணவு உட்கொண்டு விரதம் பூண்டல்.

5.கையில் மஞ்சளுடன் கூடிய காப்பு கயிறு கட்டுதல். கணவன் மனைவி உறவு கொள்ளாதிருத்தல்.

6. எளிய உணவான கூழ் கரைத்து உண்டு நோய் எதிர்ப்பு சக்தி அதிகப்படுத்துததல்.

7.தினமும் இரண்டு வேளை குளித்து மஞ்சளில் தோய்த்த ஆடை அணிதல்.

8. சுக்கு பனைவெல்லம் கலந்த பாணகம் மற்றும் மாவிலக்கு வெண்பொங்கல் சர்க்கரை பொங்கல் போன்ற உணவை சமைத்து படையல் போடுதல். இவற்றை உண்ணும் போது உடல் சுத்தி பெற்று வெப்பம் அதிகமாகி நோயை எதிர்க்கும் ஆற்றல் அதிகமாகும்.

9. வீடுகளில் காலை மாலை இரு வேளைகளிலும் சாம்பிராணி புகையிடுதல் மற்றும் வாசலில் சிறு போகி கொளுத்துதல். இதனால் வைரஸ் கிருமிகள் பரவாமல் அழிந்து போகும்.

10. எல்லாவற்றிற்க்கும் மேலாக விரதம் இருந்து கரகம் எடுத்தல் நெருப்பு மிதித்தல் போன்ற பக்தியோடு கூடிய செயல்களால் உடல் உஷ்ணம் அதிகமாகி குண்டலிணி சக்தி தூண்டப்பட்டு மேலேறி நமது எதிர்ப்பு சக்தி மண்டலத்தை பல மடங்கு பலமாக்குதல்.

கொடிய கொல்லை நோய்களை விரட்டுவதில் நம் தமிழர்கள் முன்னோடிகள் என்பதை இப்பதிவின் மூலம் உலகுக்கு உணர்த்தவதோடு மட்டுமல்லாமல் நாம் அனைவரும் தற்சமயம் மேற்கண்ட அனைத்து செயல்களையும் முடிந்த அளவு கடைபிடிக்கவும் நமது பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்கவும் கடமைபட்டுள்ளோம்.


5 comments:

  1. கடந்த ஆண்டுகளில் சிக்குன் குனியா, டெங்கு காய்ச்சல், காலரா, பிளாக், அம்மை, மர்ம காய்ச்சல் போன்றவற்றால் தமிழகத்தில் பல பேர் கொத்து கொத்தாக இறந்துள்ளனர்.

    இதற்கும் திருவிழாவிற்கும் என்ன தொடர்பு?

    ReplyDelete
    Replies
    1. Yes you are right ellame OK correct than but Thiruvila kum corona kum enna sampantham

      Delete
  2. இவ‌ற்றையெல்லாம் இப்போதும் செய்து கொரோனா நோய் தொற்று உள்ள‌வ‌ரிட‌ம் சென்றாலும் நிச்ச‌ய‌ம் ப‌ர‌வும்...ச‌வாலுக்கு த‌யாரா?...அப்புற‌ம் இந்த‌ லிஸ்ட்ல‌ ஆதி திராவிட‌ர்க‌ளையும்,நாடார்க‌ளையும் ஒதுக்கி வைத்த‌து,பெண்க‌ளை மாத‌விடாய் ம‌ற்றும் இத‌ர‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் ஒதுக்கி வைத்த‌து,பிற‌றைத் தொட்டாலே தீட்டு என்று கூறிய‌து,அல‌கு குத்திய‌து,திருவிழா நேர‌த்தில் அனைவ‌ரும் ஒன்று கூடி அசைவ உண‌வை ச‌மைத்து உண்ட‌து,ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளாக‌ குளிக்காம‌ல் இருக்கும் சாமியார்க‌ளிட‌ம் ஆசி வாங்குவ‌து,செருப்பு போடாம‌ல் ந‌ட‌ப்ப‌து.... இவையெல்லாம் விடுப‌ட்டு விட்ட‌ன‌ கொஞ்ச‌ம் அதையும் சேர்த்துக்கோங்க‌ பாஸ்...

    ReplyDelete
    Replies
    1. பிணத்தை தின்பது
      பிணத்துடன் உறவு கொள்வது

      இத மறந்துட்டீங்களே

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி