கோடைகாலத்தில் கொரோனா பரவல் குறையுமா? - kalviseithi

Mar 29, 2020

கோடைகாலத்தில் கொரோனா பரவல் குறையுமா?


வெப்பநிலை அதிகரிக்கும்போது கொரோனா வைரஸ் தொற்று குறையும் என மசாசூட் தொழில்நுட்ப ஆய்வாளர்கள் (எம்.ஐ.டி) கணித்துள்ளார்கள்.

எம்ஐடியின் ஆராய்ச்சியாளர்களால் வெளியிடப்பட்ட ஆய்வு அறிக்கையின்படி, கொரோனா வைரஸ்களால் ஏற்பட்ட பாதிப்புகள் பெரும்பாலானவை 18 டிகிரி செல்சியஸுக்குக் குறைவான சராசரி வெப்பநிலையி்ல் உருவாகி உள்ளன. வெப்பநிலை அதிகரிக்கும் போது கொரோனா வைரஸ் தொற்றுநோய் குறையும் என ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.
கோடையில் குறையும்

உலகின் வடபகுதிகளில் கோடை வலிமை பெறும்போது கொரோனா வைரஸ் பரவுதல் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.மார்ச் 22க்கு பிறகு சுற்றுச்சூழல் காரணிகளால் கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகள் வடக்கு ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா (அமெரிக்கா மற்றும் கனடா) கோடையில் கட்டுப்படும் என்பதை எங்கள் ஆய்வு தெளிவுபடுத்துகிறது.


ஜனவரி 22 முதல் மார்ச் 21 இடையிலான காலகட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலுக்கு வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் முக்கிய காரணமாக இருந்துள்ளது. இவை 4 டிகிரி முதல் 10 டிகிரி வெப்ப நிலையில் பரவி இருக்கிறது.மார்ச் 10 க்குப் பிறகு, கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கோடைகால வெப்பநிலை கொரோனா வைரஸ் தொற்றை குறைக்கும் என அந்த முடிவு தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி